யாழ்ப்பாணம் கொக்குவில் இராமகிருஷ்ணா வித்தியசாலையில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் திடீரென மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளார்.
நேற்று(14) இடம்பெற்ற இச்சம்பவத்தில் நாரந்தனையைப் பிறப்பிடமாகவும் தாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி பிரியதர்சினி கனகரத்தினம் (வயது-53) என்பவரே உயிரிழந்தவராவார்.
பாடசாலையில் மாணவர்களின் பெற்றோர்களுடனான சந்திப்பு நடந்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஆசிரியை திடீரென மயக்கமுற்று விழுந்துள்ளார்.உடனடியாக அவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
மாரடைப்புக் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.