Thursday, 13 March 2025

இந்திய வரலாற்றில் முதல் முறையாக தமிழ் மொழியில் ரூபாய் சின்னம்..!!!

SHARE

இந்திய வரலாற்றில் முதல் முறையாக தமிழ் மொழியில் ரூபாய் சின்னம்

ஹிந்தி மொழியில் அமைந்த ரூபாய் சின்னத்தை தமிழ் மொழிக்கு மாற்றி அமைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரூபாய் என்பதில் "ரூ" எழுத்தை மாத்திரம் நாணயப் பெறுமதியை குறிக்க பயன்படுத்தும் வகையில் புதிய அறிவிப்பு வௌியிடப்பட்டது.

தமிழக சட்டமன்றத்தில் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ள 2025/26 நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்ட அறிக்கையில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்திய மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக மாநில அரசினால் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாநிலமொன்றில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவது இந்திய வறலாற்றில் இதுவே முதல்முறையென இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
SHARE