பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க தயாராகும் ட்ரம்ப்..!!!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் பல்வேறு நாடுக்களுக்கு விரிவான பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு தயாராகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 3 பிரிவுகளுக்கு அமைய பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதுடன் அதில் 41 நாடுகள் உள்ளடக்கப்படவுள்ளன.
எவ்வாறாயினும், இதற்கு ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ உள்ளிட்ட நிர்வாகத்தினால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.
ஆப்கானிஸ்தான், கியூபா, ஈரான், லிபியா, வடகொரியா, சோமாலியா, சூடான், சிரியா, வெனிசுவேலா, யேமன் உள்ளிட்ட நாடுகளுக்கான விசா விநியோகம் முற்றுலுமாக இடைநிறுத்தப்படவுள்ளது.
எரித்திரியா, ஹெய்ட்டி, லாவோஸ், மியன்மார், தென்சூடான் உள்ளிட்ட நாடுகளுக்கு பகுதியளவிலான விசா தடையும் விதிக்கப்படவுள்ளது.
அத்துடன். பாகிஸ்தான், பூட்டான், கம்போடியா, கெமரூன், கொங்கோ உள்ளிட்ட நாடுகளும் பகுதியளவிலான விசா தடைவிதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.