முல்லைத்தீவு பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் நேற்று இரவு 10:00 மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் முல்லைத்தீவு பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்னர் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்று விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது
சம்பவத்தில் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த மதுசன் குணசிங்கம் வயது 28 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் சடலம் உடற்கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்