Sunday, 9 March 2025

யாழில். பாடசாலை மாணவர்களுக்கு மாவா விற்பனை - இளைஞன் கைது..!!!

SHARE

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா போதைப்பொருள் கலந்த மாவா பாக்கினை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்

வண்ணார் பண்ணை பகுதியில் வீடொன்றில் வைத்து, மாணவர்களை இலக்கு வைத்து மாவா பாக்கினை இளைஞன் ஒருவர் விற்பனை செய்து வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , குறித்த வீட்டில் இருந்து, கஞ்சா கலந்த 4 kg 250g மாவா பாக்கு, பீடித்தூள் 12 kg 500g, மற்றும் வாசனை திரவியம் 24 ரின்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.

அதனை அடுத்து மாவா பாக்கினை தயாரித்தமை மற்றும் அதனை விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டில் இளைஞனை கைது செய்த பொலிஸார் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
SHARE