கட்டுப்பணம் செலுத்தினார் அர்ச்சுனா எம்.பி - யாழ் மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்கும் கௌசல்யா..!!!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில், யாழில் உள்ள 5 உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணத்தை செலுத்தியதாக இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ் மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராகச் சட்டத்தரணி கௌசல்யாவை நிறுத்தியுள்ளதாக இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.