ஆனையிறவு உப்பளத்தில் 'ரஜலுணு' என்ற பெயரில் அரசாங்க உப்பு உற்பத்தி இன்று ஆரம்பம்..!!!
நவீன உபகரணங்கள் மற்றும் பொதியிடல் வசதிகளுடன் மீளமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளத்தில் 'ரஜலுணு' என்ற பெயரில் அரசாங்க உப்பு உற்பத்தி சனிக்கிழமை (29) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஆனையிறவு உப்பளமானது இவ்வளவு காலமும் குறைபாடுகளுடன் செயற்பட்ட அரசாங்கத்தின் உப்பு தொழிற்சாலைகளில் உப்பு உற்பத்தியின் போது அயடின் சேர்க்கும் தொழில்நுட்பம் மற்றும் வசதிகளுடனான நவீன மயப்படுத்தப்பட்ட இத்தொழிற்சாலை ஊடாக இன்றில் இருந்து நுகர்விற்காக உப்பு சந்தைக்கு அனுப்பப்படவுள்ளது.
கடந்த நாட்களில் நிலவிய உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் கைத்தொழில் அமைச்சின் கீழ் உப்பு உற்பத்தியொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கடந்த சில வாரங்களாக அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்தது.
அதன் பிரகாரம் ஆனையிறவு உப்பளத்தில் 'ரஜலுணு' என்ற பெயரில் குறித்த உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க, கடற்தொழில் அமைசர் இராமலிங்கம் சந்திரசேகரன், பா.ம.உறுப்பினர் இளங்குமரன், வட மாகான ஆளுனர் நா. வேதநாயகன், மேலதிக அரச அதிபர் நளாயினி இன்பராஜ், கண்டாவளை பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.