2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எற்றுக்கொள்ளப்படும் திகதி தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்மன்ற தேர்தல் ஊடாக 28 மாநகர சபைகள், 36 நகர சபைகள், 272 பிரதேச சபைகள் ஆகியவற்றுக்கு மாநகர முதல்வர்கள், பிரதி முதல்வர்கள், தவிசாளர்கள், பிரதி சவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளார்கள்.
அற்கமைய, உள்ளூராட்மன்ற தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை (03) முதல் 19 ஆம் திகதி வரை நடபெறும். அத்துடன், 13 ஆம் திகதி போயா தினம், 8, 9 மற்றும் 15,16 ஆம் திகதிகளில் வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் கட்டுப்பணம் செலுத்தும் முடியாது.
இதேவேளை, வேட்புமனுக்கள் இம்மாதம் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.