Saturday, 29 March 2025

யாழில். மோட்டார் சைக்கிள் விபத்து - இளைஞன் உயிரிழப்பு..!!!

SHARE

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் , மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

ஏழாலை தெற்கை சேர்ந்த சிவராசா பிரவீன் (வயது 19) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

கந்தரோடை பகுதியில் வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதிலையே விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் , விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் , சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
SHARE