Sunday, 30 March 2025

இன்றைய ராசிபலன் - 30.03.2025..!!!

SHARE

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகளை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். கூடுமானவரை வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். புதுப்பொருட்கள் வாங்குவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். கடன் கொடுக்க வேண்டாம். கடன் வாங்க வேண்டாம். வேளையிலும் வியாபாரத்தையும் நினைத்த அளவுக்கு முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் பெறுவீர்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். வேலையில் ஆர்வம் இருக்காது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உடல் சோர்வு ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நிறைய தண்ணீர் குடிக்கவும். அதிக வெயிலில் வெளியே செல்ல வேண்டாம். முயற்சிகளில் சின்ன சின்ன தடைகள் வந்து போகும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக்கவலை இருக்கும். நடந்த சங்கடங்களை எல்லாம் நினைத்து இந்த நாளை நகர்த்திச் செல்வீர்கள். சில பேருக்கு இது சுகத்தையும் கொடுக்கும், சில பேருக்கு கண்களில் நீர் வர வைக்கும். வேலையில் கூடுதல் கவனம் இருக்கட்டும். வியாபாரத்தை பொருத்தவரை அனுசரணை தேவை. இன்று கடன் வாங்க வேண்டாம்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை தரக்கூடிய நாளாக அமையும். வேலைகள் சுமூகமாக செல்லும். பிள்ளைகளுடைய மனதை புரிந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை நிதானத்தோடு இருக்க வேண்டும். அவசர முடிவுகளை எடுக்கக் கூடாது.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் இன்று சந்தோஷமாக இருப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். விருந்தாளிகளை வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வீர்கள். இதுதான் வாழ்க்கை என்பதை புரிந்து கொள்வீர்கள். சில நல்ல அனுபவங்கள் வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலைக்கு முயற்சி செய்யலாம். தொழில் தொடங்க முதலீட்டிற்கு முயற்சி செய்யலாம். இன்று வியாபாரிகளுக்கு லாபம் தரக்கூடிய நாளாக அமையும். சின்ன சின்ன பெட்டி கடை வைத்திருப்பவர்கள் கூட சந்தோஷமாக கல்லா கட்டலாம்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு எதிர்ப்பாராத நன்மை நடக்கும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை கொடுக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்க பேச்சு வார்த்தைகள் துவங்கும். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வியாபாரத்தை பொருத்தவரை பெரிசாக பிரச்சனைகள் இருக்காது.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று மன அமைதி நிறைந்த நாளாக இருக்கும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். புதிய மனிதர்களுடைய சந்திப்பு நல்லதை செய்யும். நீண்ட தூர பயணத்தை மட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதிக வெயிலில் வெளியே செல்ல வேண்டாம். வயது முதிர்ந்தவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். விடுமுறையின் நாள் என்றாலும் உங்களுடைய கடமைகளை சரிவர முடிக்க வேண்டும். எந்த வேலைையும் பிறகு செய்து கொள்ளலாம் என்று நினைக்க கூடாது. இறுதியாக நேரமின்மை காரணமாக தலைவலி வரும் நெருக்கடி ஏற்படும் ஜாக்கிரதை.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று பொதுப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். கோவிலை சுத்தம் செய்வது, அடுத்தவர்களுக்கு உதவி செய்வது, இதுபோன்ற வேலைகள் உங்களுக்கு புண்ணியத்தை தேடி தரும். இன்றைய நாள் மன நிம்மதி தரக்கூடிய நாளாக இருக்கும். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள். வேலை வியாபாரத்தை பொறுத்த வரை பெருசாக டென்ஷன் இருக்காது.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்புகள் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய முடிவுக்கு எல்லோரும் ஆளுக்கு ஒரு கருத்தை சொல்லுவார்கள். தேவையற்ற வாக்குவாதங்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. புதிய முடிவுகள் எடுப்பதை நாளை தள்ளி போடுங்கள். அன்றாட வேலையில் மட்டும் இன்று கவனம் செலுத்துகிறோம்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுக்கள் கிடைக்கும். வேலையில் நல்ல பெயர் வாங்குவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். உடல் அசதி இருக்கும். பேச்சில் சுத்தம் தேவை. சொன்ன வார்த்தையை காப்பாற்றுவதில் கவனம் செலுத்துங்கள். அனாவசியமாக பேசாதீங்க.
SHARE