மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கப் போகிறது. புதிய நண்பர்களுடைய வருகை வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தி தரும். சில பேருக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும். எதிர்கால பாடினரை சந்திக்க கூடிய வாய்ப்புகளும் இருக்கிறது. இன்று நீங்கள் சந்திக்கும் நபர் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய நல்ல மாற்றத்தை கொண்டு வந்து விடுவார். இந்த நாளை விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள். முன்னோர்களுக்கு நன்றி சொல்லுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நலமான சுதந்திரமான சந்தோஷமான நாளாக இருக்கும். நீங்கள் மனதில் நினைத்த வேலைகளை சுதந்திரமாக செயல்படுத்துவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு எந்த தடையும் இருக்காது. ஆன்மீக வழிபாடு மனதிற்கு நிறைவை கொடுக்கும். முன்னோர்கள் வழிபாடு குடும்பத்திற்கு நல்லதை செய்யும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்க காத்துக்கொண்டிருக்கிறது. உங்களுடைய கடமைகளை சரியாக செய்யுங்கள். உழைப்பதற்கு எந்த ஒரு சோம்பேறித்தனமும் இருக்கக் கூடாது. எந்த அளவுக்கு இன்று வியர்வை சொட்ட சொட்ட உழைக்கிறீர்களோ, அந்த அளவுக்கு எதிர்காலத்தில் உங்களுக்கான நன்மை வந்து சேரும். குலதெய்வ வழிபாடு இன்று கஷ்டத்தை நீக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வரவு நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் கொஞ்சம் வேலை பளு அதிகமாக தான் இருக்கும். இருந்தாலும் திறமையாக எல்லா வேலைகளையும் செய்து முடித்து, வீட்டில் இருப்பவர்களிடம் நல்ல பெயரை வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். சேமிப்பு கரைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேளையில் கவனம் செலுத்தினால் போதும். இறை வழிபாட்டில் ஆர்வம் காட்டுங்கள். இன்று முன்னோர்களது வழிபாடு குலதெய்வ வழிபாட்டை சரியாக செய்து முடித்தால் எதிர்காலம் பிரகாசிக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள், நீண்ட நாள் பிரிந்த நண்பர்கள் சேருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பழைய கதைகளை பேசி சந்தோஷமாக ஆனந்த கண்ணீர் வடிப்பீர்கள். நிம்மதி கிடைக்கும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். இந்த நாளுக்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடைகள், தடங்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. காலையில் குளித்து முடித்துவிட்டு, குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை சொல்லிவிட்டு, பிறகு உங்களுடைய வேலையை துவங்குங்கள். வாயில்லா ஜீவன்களுக்கு உங்களால் முடிந்த உணவை வாங்கிக் கொடுத்துவிட்டு, முக்கியமான வேலைகளை கவனித்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று புகழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் ப்ரோமோஷன் சம்பள உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. நிதி நிலைமை சீர்படும். வாங்கிய கடனை அடைப்பதற்கு உண்டான நேரம் காலம் கூடி வரும். அடமானத்தில் இருக்கும் சொத்து நகையை மீட்பதற்கும் வழிகளை தேடலாம். நிச்சயம் நல்லது நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பத்திற்கான தீர்வு கிடைக்கும். பிரச்சனைகள் எதனால் வந்தது என்று தெளிவில்லாமல் இருந்த உங்களுக்கு, பிரச்சனைக்கான தொடக்கப் புள்ளி கிடைக்கும். பிரச்சினைக்கு எப்படி முடிவு கட்டுவது என்ற முற்றுப்புள்ளி கிடைக்கும். யார் உங்களுக்கு தொல்லை கொடுக்கிறார்கள், யார் உங்களை ஏமாற்றுகிறார்கள், என்பதை புரிந்து கொண்டு எதிரிகளிடமிருந்து தூர விலகி நிற்கக் கூடிய நாளாக, இந்த நாள் அமையும். எதிரிகளை அடையாளம் கண்டு கொள்வீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. எந்த இடத்திலும் சோர்வடைந்து உட்காரக் கூடாது. எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், எதிர்த்துப் போராடினால் நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். துவண்டு போய் உட்கார்ந்து விட்டால், தோல்வி மட்டும்தான் மிஞ்சும். கவனத்தோடு இருங்கள். மன உறுதியோடு செயல்படுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று இன்பமான நாளாக இருக்கும். மனமகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்திக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் நன்மையை கொடுக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். இன்று இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்பாராத பண வரவு மன நிம்மதியை கொடுக்கும். உடல் உபாதைகள் நீங்கும். மேலதிகாரிகளோடு நல்லிணக்கம் ஏற்படும். தேவையற்ற டென்ஷன் குறையும். தேவையான அளவு ஓய்வும் கிடைக்கும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம், இறை வழிபாடு உங்களை நல்வழிப்படுத்தும்.