Thursday, 27 March 2025

இன்றைய ராசிபலன் - 27.03.2025..!!!

SHARE


மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று முன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அனாவசியமாக அடுத்தவர்களை குறை சொல்லக்கூடாது. தவறு அடுத்தவர்கள் மீது இருந்தால் கூட இன்று கொஞ்சம் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் அனுசரணை தேவை. வியாபாரத்திலும் அனுசரணை தேவை. உடன் வேலை செய்பவர்கள் வாடிக்கையாளர்களை கடுமையாக நடத்த வேண்டாம்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேர வாய்ப்புகள் இருக்கிறது. வேலை தொழில் எல்லாம் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் உபாதைகள் நீங்கும்.



மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலைமை சீர்படும். வாங்கிய கடனை திருப்பி அடைக்க ஒரு தொகை, கையை வந்து சேரும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக வரும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை இன்று பேசி ஒரு முடிவு எடுக்கலாம். நல்ல முடிவு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். கவலைப்படாதீங்க. எல்லாம் சரியாகிவிடும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் நிம்மதி இருக்கும். நினைத்த வேலைகளில் நினைத்த நேரத்தில் முடிப்பீர்கள். ஆரோக்கியதிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிள்ளைகள் மீது வாழ்க்கை துணை மீது இருந்து வந்த கவலைகள் நீங்கும். இறைவழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.



சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை மீண்டும் சந்தித்து சந்தோஷமாக நேரத்தை செலவழிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். கடன் சுமை குறையும். செலவுகளை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பை அதிகரித்தால் மீண்டும் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட மாட்டீர்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அதிகமான துணிச்சல் இருக்கும். எதிரிகளாக இருந்தாலும் நண்பர்களாக இருந்தாலும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவீர்கள். இதனால் சில பல பிரச்சனைகள் வரும். சில எதிரிகள் உருவாவதற்கு கூட வாய்ப்புகள் இருக்கிறது. எதுவாக இருந்தாலும் மனதில் உள்ள பாரத்தை இன்று நீங்கள் இறக்கி வைத்து விடுவீர்கள் அவ்வளவுதான்.



துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு நிறைய நன்மைகள் நடக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை நினைத்து பார்க்காத லாபத்தை சம்பாதிப்பீர்கள். சேமிப்பை உயர்த்துவீர்கள். சொத்து சுகம் வாங்குவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. எதிர்பாராத அதிர்ஷ்டம் உங்கள் வாழ்க்கை தரத்தை மாற்றி விடும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று பொறுமை இருக்கும். நிதானம் இருக்கும். பிரச்சினைகள் வந்தாலும் அதை பொறுமையாக சமாளித்து விடுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். மனநிலை சீர்பட கூடிய நாள். பக்குவம் கிடைக்கும் நாள். நிறைய அனுபவங்கள் சேரக்கூடிய நாளாகவும் இருக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தெளிவான நாளாக இருக்கும். குழப்பங்களில் இருந்து வெளி வருவீர்கள். யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்று புரிந்து கொள்வீர்கள். வேலையில் இருந்து வந்த டென்ஷனை குறைத்துக் கொள்வீர்கள். மேலதிகாரிகளுடன் நல்ல ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் பிரிந்து போன பார்ட்னர் கூட உங்களை புரிந்து கொண்டு மீண்டும் ஒன்றாக சேர்ந்து கொள்வார்கள். நல்லது நடக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று ஜெயம் உண்டாக கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாட்கள் முயற்சி செய்து வெற்றி காண முடியாத விஷயங்களை இன்று கையில் எடுத்துப் பாருங்கள். பிள்ளைகளுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பெரியவர்களுடைய பேச்சுக்கு மரியாதை கொடுக்கவும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கவலைகள் மறக்கக்கூடிய நாளாக இருக்கும். சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் துன்பம் உங்களை விட்டு விலகும். இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். வியாபாரத்தை முன்னேற்ற முயற்சிகளை மேற்கொள்ளலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். நல்லது நடக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று நிதிநிலைமை கொஞ்சம் சீர்படும். வேலையில் முன்னேற்றம் இருக்கும். மேலதிகாரிகளுடைய ஆதரவை பெறுவீர்கள். அதேசமயம் உடன் பணிபுரிபவர்களால் பிரச்சனை வரவும் வாய்ப்புகள் இருக்கிறது. கவனமாக இருங்கள். உங்களுடைய முன்னேற்றம் நிச்சயம் அடுத்தவர்களுக்கு பிடிக்காது ஜாக்கிரதை.
SHARE