Wednesday, 26 March 2025

இன்றைய ராசிபலன் - 26.03.2025..!!!

SHARE


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்த வேலைகள் நினைத்த நேரத்தில் நல்லபடியாக நடக்கும். பாராட்டுகள் கிடைக்கும். மனதில் சந்தோஷம் இருக்கும். இருந்தாலும் நீங்கள் உங்களுடைய ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். நேரத்திற்கு உணவை சாப்பிடுங்கள். நிறைய தண்ணீர் குடிக்கவும். அதிக வெயில் சமயத்தில் வெளியே செல்ல வேண்டாம்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். சேமிப்புகள் கரைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. கூடுமானவரை இன்று ஷாப்பிங் போவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் முதலீடு செய்ய வேண்டாம். அன்றாட வேலையில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தினால் போதும்.



மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சனைகளுக்கான தீர்வை கண்டுபிடிக்க கூடிய நேரமும் காலமும் கைக்கூடி வரும். உங்களுடைய நண்பர்கள் யார், எதிரிகள் யார், என்பதை நீங்கள் நன்றாக புரிந்து கொள்வீர்கள். அனுபவரீதியாக நல்ல விஷயங்கள் நடக்கும். எல்லா விஷயங்களையும் பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள். பிரச்சனைகளை கண்டு துவண்டு உட்கார வேண்டாம்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். உங்களுடைய நிலைமையை புரிந்து கொண்டு நீங்களே சரியான நேரத்திற்கு, சரியான வேலைகளை செய்ய துவங்கி விடுவீர்கள். கஷ்ட நஷ்டத்தை புரிந்து கொள்வீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பை உயர்த்துவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வீர்கள்.



சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை இருக்கும். வேலை செய்யும் இடத்திலும் அதிகமாக அடுத்தவர்களிடம் பேச மாட்டீர்கள். வியாபாரத்திலும் கொஞ்சம் பின் தங்கிய நிலையில் இருப்பவர்கள். அடுத்தவர்களை பற்றி அதிகமாக சிந்தித்துக்கொண்டே உங்களுடைய வேலையை கோட்டை விட்டு விடுவீர்கள். ஜாக்கிரதையாக இருங்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து கூட கூடிய நாள். இதோடு சேர்த்து உங்களுடைய கர்வமும் கொஞ்சம் உயரும். தனக்கு தான் எல்லாம் தெரியும். எனக்கு கீழ்தான் எல்லோரும் இருக்க வேண்டும் என்று கொஞ்சம் நினைப்பீர்கள். அடுத்தவர்கள் மீது கொஞ்சம் பொறாமை குணம் திரும்பும். இப்படி உங்களுடைய நிலையில் சின்ன சின்ன தடுமாற்றம் வரும். பார்த்து நடந்து கொள்ளவும்.



துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. எல்லா வேலையும் பிறகு செய்யலாம் என்று தள்ளிப் போடக்கூடாது. யாருக்கும் அனாவசியமாக வாக்கு கொடுக்கக் கூடாது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு இடத்திற்கு செல்வதாக இருந்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பு, 1/2 மணி நேரம் முன்பாகவே சென்று விடுங்கள். அது உங்களுக்கு நன்மையை தரும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று புதிய முதலீடுகள் செய்யலாம். புதிய வியாபாரம் துவங்குவது, புது வேலைக்கு முயற்சி செய்வது, இதுபோல வேலைகளை துவங்கலாம். நல்லது நடக்கும். புதுசாக வங்கி கடன் துவங்குவது, புதுசாக சீட்டு போடுவது, எதிர்கால சேமிப்புக்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். வெற்றி தரக்கூடிய நாள் இந்த நாள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள மாட்டீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு இருந்து கொள்ளுங்கள். மூன்றாவது நபருடைய பஞ்சாயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம். அக்கம் பக்கம் வீட்டாரிடம் கவனமாக பேசவும். நண்பர்களோடு அளவோடு பழகவும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பிரச்சனைகள் வரும். தேவையற்ற சண்டைகள் வரும். நண்பர்கள் கூட பகைவர்களாக மாறுவார்கள். வாழ்க்கை துணையோடு வாக்குவாதம் செய்யாதீங்க. சின்ன பிளவு, பெரிய அளவில் பாதிப்புகளை உண்டு பண்ணிவிடும். அனுசரணை தேவை. முன்கோபம் கூடாது. வேளையிலும் வியாபாரத்திலும் சிந்தித்து செயல்படும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ஆதரவாக சில நன்மைகள் நடக்கும். உங்களுடைய ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இத்தனை நாள் எதிர்த்துக்கொண்டு சண்டை போட்டவர்கள் கூட, இன்று நண்பர்களாக மாற வாய்ப்புகள் இருக்கிறது. நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். வாழ்க்கை பாடத்தை புரிந்து கொள்ளக்கூடிய நாள். இன்று வண்டி வாகனம் ஓட்டும் போது கவனம் இருக்கட்டும். ஆரோக்கியத்தில் கவனம் இருக்கட்டும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். செலவுகளை சமாளிக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். நிதி பற்றாக்குறை ஏற்படும். நீண்ட தூர பயணம் கொஞ்சம் அலைச்சலை தரும். வண்டி வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உடலுக்கு குளிர்ச்சி தரும் பொருளை சாப்பிடவும்.
SHARE