Tuesday, 25 March 2025

இன்றைய ராசிபலன் - 25.03.2025..!!!

SHARE


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் உற்சாகம் பிறக்கும். உங்களுக்கு தொல்லையாகவே இருந்த மேனேஜர், உயர் அதிகாரி, இடம் மாற்றம் ஆகியோ, அல்லது பிரமோஷனிலோ வேறு இடத்திற்கு சென்று விடுவார்கள். உங்களை விட்டுப் போன நிம்மதி மீண்டும் உங்களிடமே வந்துவிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். அதிக வெயிலில் ஊர் சுற்ற வேண்டாம்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த, தனம் தானியம் நிறைந்த நாளாக இருக்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆடை ஆபரண அணிகள் சேர்க்கையும் இருக்கிறது. சுப செலவுகள் உண்டாகும் நாள். வீட்டில் சுபகாரியங்கள் நடக்க முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்யலாம். புதிய வியாபாரம் துவங்க முயற்சிகளையும் மேற்கொள்ளலாம்.



மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற எதிர்ப்புகள் இருக்கும். வேலை செய்யும் இடத்தில், வியாபாரம் செய்யும் இடத்தில், சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. எதர்ச்சியாக நீங்கள் பேசும் வார்த்தை கூட அடுத்தவர்கள் மனதை காயப்படுத்த வாய்ப்புகள் இருக்கிறது. கவனமாக பேசுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூட போகிறீர்கள். நீண்ட நாட்களாக செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த காரியத்தை இன்று செய்து, வெற்றியும் காண்பீர்கள். மனநிறைவு இருக்கும். நீண்ட நாள் தவறை திருத்திக் கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். நிதிநிலைமை கொஞ்சம் மோசமாகும். வீண் செலவுகள் உண்டாகும்.



சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மனக்கவலை இருக்கும். ஆழ்ந்த சிந்தனையால் முக்கியமான வேலையில் கவனம் செலுத்த முடியாது. உடல் உபாதைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நீண்ட தூர பயணத்தை குறைத்துக் கொள்ளுங்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். புது மனிதர்களோடு பழக வேண்டாம். குடும்ப பிரச்சினையை யாரிடமும் அனாவசியமாக வெளியில் சொல்ல வேண்டாம். அதிகம் சிந்திக்க வேண்டாம்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை தரும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்யலாம். அயராது உழைத்த உங்கள் உழைப்புக்கு நல்லதொரு அங்கீகாரம் கிடைக்கும். விவசாயிகளுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். இதுநாள் வரை உங்களை திரும்பி பார்க்காத உலகம் இன்று திரும்பிப் பார்க்கும். அந்த அளவுக்கு நல்லது நடக்கும். இந்த நாளை தந்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.



துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று துன்பத்திலிருந்து விடுபடக் கூடிய நாள். சோம்பேறித்தனத்திலிருந்து விடுபடக்கூடிய நாள். அனுபவ பாடம் கிடைக்கும். இந்த நாளில், செய்த தவறை நினைத்து வருத்தப்பட்டு, இனி அந்த தவறை செய்யக்கூடாது என்று உறுதி மொழியும் எடுத்துக் கொள்வீர்கள். நிறைய பேருக்கு இன்று கெட்ட பழக்கத்திலிருந்து விடுபட நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. நல்லது நடக்க இந்த நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற டென்ஷன் குறையும். மன அமைதி உண்டாகும். வேலை வியாபாரம் எல்லாம் நீங்கள் நினைத்ததை விட நல்லபடியாக நடக்கும். அர்த்தம் இல்லாதவர்களுடைய வாழ்க்கையில் கூட அர்த்தம் உண்டாகும். தடைபட்டு வந்த சுப காரிய பேச்சுக்கள் தொடங்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பெருசாக எந்த பிரச்சினையும் இல்லை. நேரத்திற்கு அந்தந்த வேலைகள் சரியாக நடக்கும். நல்ல ஓய்வு, நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் இருக்கும். உடல் உபாதைகள் நீங்கும். ஆரோக்கியம் கிடைக்கும். வேலையில் இருந்து வந்து டென்ஷன் குறையும். வியாபாரத்தை விரிவு படுத்த நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கும் இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். காலையிலேயே உங்கள் வேலைகளை சுறுசுறுப்பாக முடித்துக் கொள்ளுங்கள். சோம்பேறித்தனத்தோடு உட்கார கூடாது. உங்கள் பொறுப்பை அடுத்தவர்கள் கையில் கொடுக்கவே கூடாது. ஜாக்கிரதை.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்ப்பாராத அதிர்ஷ்டம், எதிர்பாராத பரிசு, எதிர்பாராத பணவரவு, எதிர்பாராத நல்ல பெயர் காத்துக் கொண்டிருக்கிறது. ஆவாங்க எல்லாமே எதிர்பாராமல் நடக்கும். நல்லதாகவே நடக்கும். நீங்கள் நீண்ட நாள் பயந்து இருந்த ஒரு விஷயம் உங்களுக்கு சாதகமாக முடியும். அது கோர்ட் கேஸ் வழக்காக இருக்கலாம், கடன் பிரச்சினையாக இருக்கலாம், அல்லது சுகாரிய தடையாக இருக்கலாம், எதுவோ ஒன்று. இன்று தானாக சரியாக போகிறது. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று அன்பு வெளிப்படும் நாளாக இருக்கும். உங்களின் மீது அக்கறை காட்டுபவர்களை நீங்கள் சரியாக புரிந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு சரியாகும். குடும்ப பிரச்சனை தீரும். உடல் ஆரோக்கியத்தில் சிறிது முன்னேற்றம் ஏற்படும். உடல் பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க உண்டான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இன்றைக்கு நீங்கள் துவங்கும் முயற்சி எதிர்காலத்தில் வெற்றியைத் தரும்.
SHARE