Monday, 24 March 2025

இன்றைய ராசிபலன் - 24.03.2025..!!!

SHARE


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல விஷயங்கள் எல்லாம் தானாக தேடி வரும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய நண்பர்களின் வரவு சந்தோஷத்தை கொடுக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். நீண்ட நாள் கடன் சுமை குறையும். நிதி நிலைமை சீராகும். நீண்ட நாள் தொந்தரவுகள் விலகும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற எதிர்ப்புகள் இருக்கும். தேவையற்ற பிரச்சனைகள் உங்களை நோக்கி வரும். வேலை செய்யும் இடத்திலும் வியாபாரத்திலும் கவனமாக இருந்து கொள்ளுங்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உடலுக்கு சூடு தரும் உணவு பண்டங்களை சாப்பிட வேண்டாம். நிறைய தண்ணீர் குடிக்கவும்.



மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். வாரா கடன் வசூல் ஆகும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாக கூடிய நாள் இன்று.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று மன கவலைகள் விடுபடக்கூடிய நாளாக இருக்கும். வேலைகள் சுறுசுறுப்பாக நடக்கும். மேல் அதிகாரிகளோடு இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வேலை செய்யும் இடத்தில் மன நிம்மதி உண்டாகும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். புதிய முதலீட்டுக்கு உண்டான கடன் தொகை கிடைக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும்.



சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டும் பெயரும் புகழும் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். சந்தோஷம் இருக்கும். உற்சாகத்தோடு இருப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். கணவன் மனைவிக்குள் எந்த ஒலிவு மறைவும் இருக்கக் கூடாது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் அளிக்க காத்துக் கொண்டிருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். நீண்ட நாள் பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். நீண்ட தூர பயணங்களின் மூலம் நல்லது நடக்கும். வேலையில் இருந்து வந்து டென்ஷன் குறையும். வியாபாரத்திலிருந்து வந்த தடைகள் விலகும்.



துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு தடைகள் தடங்கல்கள் ஏற்படக்கூடிய நாளாக இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் சிறிது பின்னடைவு உண்டாகும். சோம்பல் ஏற்படும். மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இன்று கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். குல தெய்வத்தை கும்பிடுங்கள் நல்லது நடக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு தேவையற்ற மனக்கவலை இருக்கும். சிந்தனையிலேயே பாதி நாள் ஓடிவிடும். வேலையில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். முக்கியமான வேலைகளை பொறுப்போடு செய்யுங்கள். தவறாக வேலை செய்துவிட்டு பிறகு, பின்விளைவுகளை சந்திக்க வேண்டாம்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு தேவை. எந்த ஒரு விஷயத்திலும் சோம்பேறித்தனம் இருக்கக் கூடாது. பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கவும். பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனையில் கவனமாக இருக்க வேண்டும். ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். விவசாயிகளுக்கு இன்று முன்னேற்றம் இருக்கும்.

மகரம்


மகர ராசிக்இன்று தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். முடியாத காரியத்தை கூட முடித்துக் காட்டுவீர்கள். வாழ்க்கையில் முன்னேற்ற பாதையை நோக்கி உங்களுடைய பயணம் துவங்கும். எதிர்ப்புகளை சமாளிக்க கூடிய தைரியம் பிறக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுடைய கை ஓங்கி நிற்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானத்திற்கு எந்த குறைவும் இருக்காது. நீண்ட நாள் வராத பணம் கையை வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பிரிந்த உறவுகளுக்குள் ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். சுப செலவுகள் ஏற்படும். வண்டி வாகனம் ஓட்டும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். மேலதிகாரிகளுடைய ஆதரவு கிடைக்கும். உழைப்புக்கு ஏற்ற நல்ல பலனை பெறுவீர்கள். சிந்திக்கும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். குழந்தைத்தனமாக இருக்க வேண்டாம். எல்லோரிடமும் ஒரே மாதிரி பழகக் கூடாது ஜாக்கிரதை.
SHARE