Saturday, 22 March 2025

இன்றைய ராசிபலன் - 22.03.2025..!!!

SHARE


மேஷம்


மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் லாபம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே சுமுகமான பேச்சுவார்த்தை நல்லது. தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் திறமைக்கு உரிய பாராட்டுகள் பெறுவீர்கள். ஆரோக்கியம் பலப்படும்.

ரிஷபம்


ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மேன்மை உண்டாகும். பிள்ளைகளை நினைத்து பெருமிதம் கொள்வீர்கள். வரவுக்கு மீறிய செலவுகள் வரலாம் கவனம் வேண்டும். உங்களுடைய இரக்க குணத்தால் ஏமாற்றம் அடைவீர்கள். சிலருக்கு மன உளைச்சல் அதிகரிக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள்.



மிதுனம்


மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெற்றி தரக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. எடுத்த முடிவுகளில் இருந்து பின்வாங்காதீர்கள். சுய சிந்தனை நற்பலன் கொடுக்கும். சிரமங்களை தாண்டி சில விஷயங்களை வெற்றி கொள்வீர்கள். மாணவர்கள் கல்வியில் கவனக் குறைவு ஏற்படும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைகள் மெல்ல மெல்ல மறையும்.

கடகம்


கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் மனம் அலைபாயும் நாளாக இருக்கிறது. மதில் மேல் பூனை போல எந்தப் பக்கம் சாய்வது என்று யோசிப்பீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு பாராட்டுகள் பெறுவீர்கள். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து விட்டுக் கொடுத்து விடுங்கள். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.



சிம்மம்


சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் ஆர்வம் ஏற்படக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. நீங்களாகவே முன் வந்து சில விஷயங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். கணவன் மனைவி உறவில் விரிசல் விழலாம் கவனம் வேண்டும். வெளியிடங்களில் புகழ் அதிகரிக்கும். பக்தியின் பக்கம் மனதை செலுத்துவீர்கள்.

கன்னி


கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சோர்வுடன் காணப்படுவீர்கள். அலைச்சல் அதிகரித்து இருக்கும். குடும்பத்தில் தாமதமான முடிவுகளால் பின் விளைவுகளை சந்திப்பீர்கள். தொழில் ரீதியான தடைகள் விலகும். பெண்களுக்கு கேட்டது கிடைக்கும் அற்புத நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் அலட்சியம் செய்யாதீர்கள், சிறு உபாதைகளையும் கவனியுங்கள்.



துலாம்


துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆக்கமுடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவி உறவில் கருத்து வேறுபாடுகள் வரும். கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்காது போகலாம். தொழில் ரீதியான பணிவு உங்களை உயர்த்தும். மாணவர்களுக்கு நஷ்டம் வரலாம் கவனம் வேண்டும். தேவையில்லாத பகை வளர விடாதீர்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கோபத்தை குறைப்பது நல்ல பலன் தரும். உங்களுடைய முன்கோபத்தால் சிலவற்றை இழக்க நேரலாம் கவனம் வேண்டும். கணவன் மனைவி உறவில் புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எதிர் பாலினத்தாரால் பிரச்சனை வரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தனுசு


தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சோதனை நிறைந்த நாளாக இருக்கிறது. வெளியிடங்களில் பொறுமையை கடைப்பிடிப்பது அவசியமாகிறது. முக்கியமான விஷயங்களை மறந்துவிட்டு தவிப்பீர்கள். மனதில் இனம் புரியாத பயம் தொற்றிக் கொள்ளும். உங்களைப் போட்டியாக நினைத்தவர்கள் விலகி செல்வார்கள். வேகத்தை குறைத்து விவேகமாக செயல்படுங்கள்.

மகரம்


மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆதாயம் காணக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில்முறை போட்டிகள் அதிகரிக்கும். வியாபார விருத்தி உண்டாகும். பெண்களுக்கு நினைத்ததை சாதிக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. வரவை விட செலவுகள் அதிகரிக்கும். மாணவர்கள் எதிர்பாராத தோல்விகளை சந்திக்கலாம். கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்.

கும்பம்


கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏமாற்றம் நிறைந்த நாளாக இருக்கப்போகிறது. நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி நிறைந்திருக்கும். சமுதாயத்தில் உங்களுடைய புகழ் ஓங்கி இருக்கும். அடம் பிடித்து காரியத்தை சாதிக்க நினைக்காதீர்கள். மன உளைச்சல் குறைய பக்தியை தேர்ந்தெடுங்கள்.

மீனம்


மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உழைப்பால் உயரக்கூடிய நாளாக இருக்கிறது. பனிச்சுமை அதிகரித்து காணப்படும். சோதனைகளை கடந்து வெற்றி பெறுவீர்கள். சுபகாரிய விஷயங்களில் தாமதம் ஏற்படும். மாணவர்கள் தேவையற்ற பொழுதுபோக்குகளை தவிர்த்து திறமைகளை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்வீர்கள். சினம் உங்களை வேதனைக்கு உள்ளாக்கும் எனவே தவிர்ப்பது உத்தமம்.
SHARE