மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மை தரக்கூடிய நல்ல நாளாக அமையப் போகிறது. கடன் தொல்லைகள் தீர்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கக் கூடும். வேலை விஷயமாக பயணம் மேற்கொள்ளும் பொழுது கவனமுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் வெறுப்பை வளர்த்துக் கொள்ளாதீர்கள், விட்டுக் கொடுத்து செல்லுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கனவுகள் நினைவாக கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் போட்டிகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயிலும் மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் வேண்டும். நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு விஷயம் கைக் கூடி வரப் போகிறது.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் நல்ல நிகழ்வுகள் நடக்கப் போகிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே மகிழ்ச்சி பொங்கும். தொழில் ரீதியான போட்டிகள் வலுவாகும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை பேணுங்கள். தகாத நண்பர்களின் நட்பை புறக்கணிக்க தயங்காதீர்கள். வீண் வம்பு, வழக்குகள் வரலாம். கவனம் வேண்டும்.
கடகம்
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுப்புகள் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கிறது. எதிர்காலம் பற்றிய கவலை மேலோங்கி காணப்படும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு லாபம் உயரும். கனிவான பேச்சாற்றல் நினைத்ததை சாதிக்க உறுதுணையாக இருக்கும். பக்தியில் ஈடுபாடு உண்டாகும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உழைப்பால் உயரக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. எதிர்பாராத நிகழ்வுகள் புத்துணர்ச்சியை கொடுக்கும். புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். பகைவர்களும் நண்பர்களாக மாறுவார்கள். கணக்கு வழக்குகளில் கவனமுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை வேண்டும்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எதிர்பார்ப்புகள் பூர்த்தியாக கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சமூக அக்கறை அதிகரித்துக் காணப்படும். நீண்ட நாள் ஏக்கம் முடிவுக்கு வரப்போகிறது. தொழில் ரீதியான பிரச்சனைகளை திறம்பட சமாளிப்பீர்கள். மற்றவர்களின் விஷயத்தில் சற்று தள்ளியே இருங்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் மறையும். இதுவரை உங்களுக்கு இடையூறாக இருந்த சில விஷயங்கள் விலகிச் செல்லும். கிடைக்கின்ற வாய்ப்புகளை தட்டிக் கழிக்காதீர்கள். திடீர் செலவுகள் வரலாம் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மேன்மை பெறக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் இருந்து வந்த தடை நீங்கும். தொழில் செய்பவர்களுக்கு சராசரி லாபம் இருக்கும். மாணவர்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வார்கள். உங்களின் நேர்மையால் வெற்றி பெறுவீர்கள்.
தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெற்றி மேல் வெற்றிகள் குவியக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. புதியவர்களின் அறிமுகம் சிலவற்றை கற்றுக்கொள்ள உதவும். கணவன் மனைவிக்குள் அமைதியான பேச்சு வார்த்தை வெற்றி தரும். பெரியோர்களின் அன்பும், ஆசியும் பெறுவீர்கள். கடந்த கால அனுபவங்கள் உதவிக்கரமாக இருக்கும்.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சந்தோஷம் ஏற்படக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. இதுவரை அனுபவித்து வந்த வேதனைகள் மறையும். சகோதர, சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். வரவுக்கு மீறிய செலவுகளை கட்டுப்படுத்துவது திருப்தி தரும். கணவன் மனைவி உறவில் அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.
கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நற்பலன் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. மற்றவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் அமையும். திடீர் அலைச்சல் சோர்வை ஏற்படுத்தும். வீண் விவாதங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. தந்தை வழி உறவினர்கள் மூலம் அனுகூல பலன் உண்டு.
மீனம்
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. பேச்சை குறைப்பது நல்லது. உங்கள் வாயால் தான் நிம்மதியை இழக்கப் போகிறீர்கள். கணவன் மனைவி உறவில் அன்னோன்யம் கூடும். கடன் தொல்லைகள் குறையும். தொழில் ரீதியாக பழைய பாக்கிகள் வசூல் ஆகும். மாணவர்களின் தங்களின் அறிவுத்திறன் வளர புதிய விஷயங்களை தேடுவார்கள். ஆரோக்கியத்தில் குறை இல்லை.