மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்தது தடைப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. திருமண பேச்சுவார்த்தையில் நல்ல முடிவுகள் கிடைக்கும். நீண்ட நாளாக காத்திருந்த செய்தி ஒன்று தேடி வரும். கடமையில் பொறுப்புணர்வுடன் இருப்பது நல்லது. தேவையற்றவர்களிடம் முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான பலன்கள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. உங்களுடைய நகைச்சுவையான பேச்சாற்றல் மூலம் நினைத்ததை சாதிப்பீர்கள். குடும்ப உறவுகளுக்குள் வார்த்தைகளில் கவனம் வேண்டும். உடல் உஷ்ணம் அதிகரிக்கலாம் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்தது நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. எதிர்பாராத திருப்பங்கள் மகிழ்ச்சியை உண்டாக்கும். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நன்மை தரும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நற்செய்தி கிட்டும். தொழில் ரீதியான போட்டிகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
கடகம்
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பண ரீதியான விஷயத்தில் புதிய நபர்களை நம்ப வேண்டாம். கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் குறையும். உடன் பணி புரியும் பணியாளர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். வீண் பகை வளரலாம் எச்சரிக்கை வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெற்றி கிடைக்கக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொட்டதெல்லாம் துலங்கும் அற்புதம் நடக்கும். கணவன் மனைவிக்குள் பரஸ்பர ஒற்றுமை நிலவும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு உண்டு. நெடுந்தூர பயணங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. சுவாசப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு, கூடுதல் அக்கறை வேண்டும்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சமூகமான பலன்கள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கிறது. எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணவரத்து இருக்கும். சமூக அக்கறை அதிகரித்து காணப்படும். முக்கிய முடிவுகளை மனைவியுடன் கலந்தாலோசித்து எடுப்பது நல்லது. வேண்டாத வம்பு, வழக்குகளில் இருந்து தள்ளி இருங்கள். பிள்ளைகளின் எதிர்கால கவலைகள் மேலோங்கும்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மை தரும் நல்ல நாளாக இருக்கப் போகிறது. துஷ்டனை கண்டால் தூர விலகிச் சொல்லுங்கள். முக்கியமில்லாத நபர்களிடம் உங்கள் சொந்த ரகசியங்களை சொல்லாதீர்கள். குதர்க்கமான பேச்சால் துன்பம் நேரலாம். உங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்ள முயற்சி செய்வீர்கள். உறுதுணையாக இருக்கும் உறவுகளை அலட்சியம் செய்யாதீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விரும்பிய விஷயங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமையும். கணவன் மனைவி உறவுக்கு இடையே விரிசல் விழலாம் கவனம் வேண்டும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். திட்டமிட்ட காரியங்கள் எதிர்பார்த்த பலன் தரும். ஆரோக்கியம் மேம்படும்.
தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். எதிர்பாராத நல்ல செய்திகள் உற்சாகப்படுத்தும். உதவி என்று கேட்பவர்களிடம் மறுப்பு தெரிவிக்காதீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும். கலைத்துறைகளில் உள்ளவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளியிட பயணங்களின் பொழுது கூடுதல் பாதுகாப்பு தேவை. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகலாம். எந்த ஒரு காரியத்தையும் நிதானமாக செய்யுங்கள் பதற்றம் கொள்ளாதீர்கள். பதறாத காரியம் சிதறாது. கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைகளை பேசி பேசி பெரிதாக்காதீர்கள். சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும்.
கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மை தரும் நல்ல நாளாக இருக்கிறது. சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மன கஷ்டப்புகள் மாறும். உங்களின் எல்லா நேரங்களிலும் பக்க பலமாக இருப்பவர்களை அலட்சியம் செய்யாதீர்கள். பிள்ளைகளின் மூலம் சில தொல்லைகள் வரக்கூடும். வேலை பளு காரணமாக சிலருக்கு மனசோர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு.
மீனம்
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எண்ணியது எண்ணிய படி நடக்கும் நல்ல நாளாக இருக்கிறது. நண்பர்களுடன் நேரத்தை அதிகமாக செலவிடுவீர்கள். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரலாம். பண விஷயத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது. மூன்றாம் மனிதர்களின் பேச்சைக் கேட்டு முடிவெடுக்காதீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.