மேஷம்
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிமையான நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்டுக் கொண்டிருந்த வேலைகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவிக்குள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளியிட பயணங்களில் கூடுதல் கவனமுடன் இருப்பது நன்மை தரும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சமூகமுடன் இருக்கும்.
ரிஷபம்
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் நிறைந்த நாளாக காணப்படுகிறது. குடும்பத்தில் குழப்பங்கள் குறையும். அடுத்தவர்களின் பிரச்சனைகளில் நீங்களாகவே சென்று மூக்கை நுழைக்காதீர்கள். இன்றைய நாளில் கடினமான உழைப்பை கொடுத்தால் உழைப்பிற்குரிய அங்கீகாரம் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மிதுனம்
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் நினைப்பதை காட்டிலும் சுபயோக பலன்களை பெறுவீர்கள். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை கூடும். தொழில் செய்யும் இடத்தில் மற்றவர்களின் மனதையும் புரிந்து கொண்டு நடந்து கொள்வது நல்லது. பயணங்களில் உடைமை மீது கவனம் தேவை. பொறுப்புகளை தட்டி கழிக்காதீர்கள்.
கடகம்
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுமை தேவைப்படக்கூடிய நாளாக இருக்கிறது. எதிலும் அவசரப்படாமல் நிதானத்தை கையாளுங்கள். கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுப்பது நல்லது. பூர்வீக சொத்து பிரச்சனை தொடர்பான பேச்சு வார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டு. வெளி உணவுகளால் உடல் உபாதைகள் ஏற்படலாம், கவனமுடன் இருப்பது நல்லது. மனச்சோர்வு நீங்கும்.
சிம்மம்
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. எண்ணியது எண்ணியபடி நடக்காமல் போகலாம். கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சனைகளில் அவசரப்படாதீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு அமையும். பெண்களுக்கு பேச்சுத் திறமையால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள்.
கன்னி
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுக்கும் முயற்சிகளில் கடினத்தன்மை காணப்படும். பண ரீதியான விஷயத்தில் சொந்த முடிவுகள் எடுப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். திடீர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. அனுகூலமான பலன்கள் பெற திட்டமிட்டு செயல்படுங்கள். கண் சார்ந்த பிரச்சினைகள் வரலாம் எச்சரிக்கை தேவை.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. எடுத்த முடிவுகளில் இருந்து பின்வாங்காதீர்கள். குடும்ப உறவுகளுக்குள் இதுவரை இருந்து வந்த மனகசப்புகள் மறையும். தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுப்பது அன்னோன்யத்தை அதிகரிக்கும். புதிய முயற்சிகளால் லாபம் உண்டாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் நிம்மதி நிலவும். ஆரோக்கிய ரீதியான சிறு சிறு பிரச்சனைகளை அவ்வபோது சந்திப்பீர்கள். ஜாமீன் கையெழுத்து போடுவதில் கவனமுடன் இருப்பது நல்லது. எதிர்பாரா நபரின் அறிமுகம் உண்டாகும். மனக்குழப்பம் நீங்க தியானம் மேற்கொள்ளுங்கள். யாருக்கும் அறிவுரை கூறாதீர்கள்.
தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான பலன்கள் காத்துக் கொண்டிருக்கிறது. நண்பர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பயணங்கள் மூலம் லாபம் பார்க்கலாம். புதிய தொழில் சிந்தனைகள் உருவாகும். கொடுக்கல் வாங்கலில் சமரசம் பேசுங்கள்.
மகரம்
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நலம் தரும் நல்ல நாளாக இருக்கிறது. ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். உறவினர்களின் வருகை லாபம் தரும். வீண் விரயங்கள் வராமல் இருக்க திட்டமிட்டு செயல்படுங்கள். வாகன போக்குவரத்துகளில் மிதவேகம் கடைபிடியுங்கள். மனதிற்கு பிடித்தவர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள்.
கும்பம்
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எண்ணியது ஈடேற கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சாதிக்க நினைத்ததை முடித்துக் காட்டுவீர்கள். முன்பின் தெரியாதவர்களின் அறிமுகத்தில் கவனம் வேண்டும். கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதங்கள் நடக்கலாம், வாயை குறைப்பது நல்லது. இடையூறாக இருந்து வந்த சில விஷயங்கள் தானாகவே விலகிச் செல்லும்.
மீனம்
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத தன லாபம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய அமைப்பு உண்டு. கணவன் மனைவிக்குள் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்லுங்கள். கடன் தொல்லைகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். மனதிற்கு பிடித்த விஷயங்கள் நடக்கும். தேவையான சமயத்தில் நண்பர்களின் உதவிக்கரம் கிட்டும். ஆரோக்கியம் சீராகும்.