யாழில் 17 வயது சிறுமி உயிரிழப்பு..!!!
யாழ்ப்பாணம் கோண்டாவிலில் விபரீத முடிவெடுத்த சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் மரணமடைந்துள்ளார்.
இதில் அதேபகுதியைச் சேர்ந்த இராஜேஸ்கண்ணா சஞ்சிகா (வயது-17) என்ற சிறுமியே உயிரிழந்தவராவார்.
குறித்த சிறுமி கடந்த 20ஆம் திகதி விபரீத முடிவெடுத்து அதிக மாத்திரைகளை உட்கொண்டுள்ளார். இந்நிலையில் அவரது பெற்றோர் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் மாலை உயிரிழந்துள்ளார்.
மரணம் தொடர்பில் மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டார்.