இன்றைய ராசிபலன் - 16.03.2025..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சுடக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தை முன்னேற்றுவதற்கு தேவையான முயற்சிகளை செய்யலாம். புதுசாக வேலைக்கு ஆட்களை எடுப்பதாக இருந்தாலும், இன்று தேர்வுகளை நடத்தலாம். விடுமுறை நாளாக இருந்தாலும் இன்று நீங்கள் செய்யும் வேலைகள், உங்களுக்கு பல மடங்கு உயர்வை கொடுக்கும். விடுமுறை நாள் அன்று வேலை செய்வது ஒன்றும் தவறு கிடையாது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் தரும் நாளாக இருக்கும் செய்த வேலைகளுக்கு உண்டான பாராட்டு கிடைக்கும். எவ்வளவு உழைத்தும் எதுவுமே நடக்கவில்லையே என்று வாழ்க்கையை விரக்தியாக நடத்தி செல்பவர்களுக்கு, இன்று விடிவு காலம் பிறந்து விடும். என்றோ போட்ட முதலீடு, என்றோ செய்த நல்லதுக்கு இன்றைக்கு பலன் உங்கள் வீடு தேடி வரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வீட்டில் சில பல பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தேவையற்ற மனக்கசப்பான சம்பவங்கள் நடக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், அதை திறமையாக கையாள வேண்டும். வேகமாக எந்த வேலையும் செய்யாதீங்க. விவேகத்தோடு செய்யுங்க. நிச்சயம் நல்லது நடக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். செய்யும் வேலையில் திருப்தி இருக்கும். உங்களுடைய நேர்மைக்கு நல்ல பெயர் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பாராத அளவு முன்னேற்றம் இருக்கும். குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். நிதி நிலைமை சீராகும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். விடுமுறை நாள் என்பதால் குடும்பத்தோடு நேரத்தை அதிகமாக செலவு செய்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சமையல் வேலை இரட்டிப்பாக வாய்ப்புகள் இருக்கிறது. வீட்டில் விருந்தாளிகளின் வருகை, சுப செலவு இருக்கும். வேலை அதிகமாக இருந்தாலும் சந்தோஷத்திற்கு எந்த குறையும் இல்லை.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று உங்களுடைய வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை எல்லாம் அனுபவமாக எடுத்துச் செல்ல வேண்டும். முயற்சிகளில் தடை வரும். பணம் நிறைய செலவாகும். நஷ்டம் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு பக்குவத்தோடு இருங்கள். தோல்வியை கண்டு துவண்டு போகக் கூடாத நாள் இன்றைய நாள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அனுபவரீதியாக நல்ல பாடம் கிடைக்கும். பெரியவர்கள் சொல்லி நீங்கள் சில விஷயத்தை மறுத்திருப்பீர்கள். அடம்பிடித்து சில விஷயத்தை செய்திருப்பீர்கள். அதனால் பின்விளைவுகளை சந்திப்பீர்கள். ஏன் இதை செய்யக்கூடாது என்று விதாண்டா வாதம் செய்து, கேள்வி கேட்டவர்களுக்கு எல்லாம் இன்றைக்கு சரியான பதில் கிடைக்கும். புரிந்ததா. கட்டுப்பாடுகளை மீறியதற்கு உண்டான தண்டனை கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது, ஜாக்கிரதை.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த நாள் எந்த ஆர்ப்பாட்டமும் இருக்காது. அந்தந்த வேலைகள் அந்தந்த நேரத்தில் நடக்கும். விடுமுறை நாள் என்பதால் வீட்டில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். சந்தோஷம் அதிகரிக்கும். சுப செலவுகள் உண்டு. வேலையிலும் வியாபாரத்திலும் சுமுகமான நிலை காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். இறைவழிபாடு செய்வது மேலும் நன்மைகளைத் தரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சில பேருக்கு இன்று நீண்ட தூர பயணங்கள் ஏற்படலாம். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று சுப செலவுகளை செய்வதற்கு உண்டான வாய்ப்புகளும் இருக்கு. கொஞ்சம் அலைச்சல் இருக்கும். அதிக வெயில் சமயத்தில் வெளியில் போகாதீங்க. நிறைய தண்ணீர் குடித்து உடல் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளவும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று தைரியம் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். இதுநாள் வரை மனதிற்குள் போட்டு புதைத்து வைத்திருந்த விஷயங்களை எல்லாம் இன்று, வெளியே கொட்டி விடுவீர்கள். நீதி நியாயம் கேட்பதாக இருந்தாலும் கேட்கலாம். குடும்ப பஞ்சாயத்துகளை வைத்துக் கொள்ளலாம். கணவன் மனைவி சண்டைக்குள் பஞ்சாயத்து வைத்துக் கொள்ளலாம். எல்லாம் ரணகளமாக இருந்தாலும், ஒரு நல்ல தீர்வு கிடைக்கக்கூடிய நாளாக இன்று இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்ப்பாராத பண வரவு இருக்கும். வியாபாரத்தில் நீங்கள் நினைத்து பார்க்காத கான்ட்ராக்ட் உங்களுக்கு கிடைக்கும். எதிர்காலத்திற்கு வருமானத்திற்கு தேவையான ஒப்பந்தங்களை இன்று போடலாம். புதிய முதலீடு செய்யலாம். பெரிய மனிதர்களின் மூலம் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தேவையான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். யாரிடமாவது இன்று நீங்கள் உதவி என்று போய் கேட்டாலும் தட்டாமல் அதை செய்து விடுவார்கள். எல்லா விஷயத்திலும் இன்று உங்களுக்கு லாபம் தான் கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. உடல் உபாதைகள் நீங்கும். சுதந்திரமாக முடிவு எடுக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். நிதிநிலைமை சீராகும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வண்டி வாகனத்தில் செல்லும்போது மட்டும் ஜாக்கிரதையாக இருங்கள்.