Saturday, 15 March 2025

இன்றைய ராசிபலன் - 15.03.2025..!!!

SHARE


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தொட்ட காரியம் எல்லாம் லாபமாக பெருக்கும். புதிய முதலீடுகள் செய்யலாம். புதிய வியாபாரம் தொடங்கலாம். புது வேலை தேடலாம். உங்களுடைய வாழ்க்கைக்கு என்னென்ன விஷயங்கள் புதுசாக தேவைப்படுகிறதோ, அதையெல்லாம் இன்று நீங்கள் முயற்சி செய்து கொள்ளலாம். அதில் இறைவன் உங்களுக்கு வெற்றியும் கொடுப்பான்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். இறை வழிபாடு செய்வீர்கள். வீட்டில் இருப்பவர்களுடைய நலனில் அக்கறை காட்டுபீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நினைத்தபடி நல்லது நடக்கும்.



மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. தொலைபேசியின் மூலம் நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். வீட்டில் சுப காரியத்தடை விலகும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இன்று நல்ல செய்தி உண்டு. குழந்தை வரம் வேண்டி மருத்துவமனைக்கு செல்வதாக இருந்தாலும், இந்த நாளில் செல்லலாம். உங்களுக்கு பாசிட்டிவான தகவல்கள் கிடைக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பார்த்து ஏமாந்த இடத்திலிருந்து பணம் உங்கள் கையை வந்து சேரும். நிதி நிலைமை உயரும். உங்களுடைய கடன் பிரச்சனைகளை எல்லாம் சரி செய்து விடுவீர்கள். உற்சாகத்தோடு இந்த நாளை கழிப்பீர்கள். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை கொடுக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் கவனம் தேவை. ரொம்பவும் முக்கியமான விஷயங்களை மறந்து, முக்கியமான நபரிடம் திட்டு வாங்க வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் மனது கஷ்டப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. எது நடந்தாலும் அது உங்கள் நன்மைக்கே அதை ஒரு அனுபவமாக எடுத்துக் கொள்ளுங்கள். மனம் உடைந்து போகாதீர்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். நீண்ட தூர பயணங்கள் இருக்கும். உடல் அசதி இருக்கும். இருந்தாலும், அந்தந்த வேலைகளை அந்தந்த நேரத்தில் முடித்து விடுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். எதிரிகளை குறைவாக எடை போட வேண்டாம். எல்லா இடத்திலும் உஷாராக இருக்கவும்.



துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வீட்டில் இருக்கும் பெண்கள் பிள்ளைகளுடைய எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். வீட்டில் பழுதான பொருட்களை எல்லாம் சரி செய்வீர்கள். தேவையில்லாத பொருட்களை தூக்கி வெளியில் போடுவீர்கள். இந்த நாள் சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய நாளாக இருக்கும் பாருங்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். வேலைகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று யோசிப்பீர்கள். வேலையில் பின்னடைவு உண்டாகும். மேலதிகாரிகளுடன் கொஞ்சம் திட்டும் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்திலும் கூடுதல் கவனம் செலுத்தவில்லை என்றால், நஷ்டம் வர வாய்ப்புகள் உள்ளது ஜாக்கிரதை.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத நஷ்டங்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. புதிய முதலீடுகளை செய்யாதீர்கள். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீர்கள். நீண்ட தூர பயணங்களையும் தவிர்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வேலையை பொறுப்பை அடுத்தவர் கையில் ஒப்படைக்க வேண்டாம்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் இருக்கும். வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். எதிரிகளை வீழ்த்தக்கூடிய நாள், பாராட்டுகள் கிடைக்கக்கூடிய நாள். பதவி உயர்வு உங்களை தேடி வரக்கூடிய நாள். வீட்டில் இருக்கும் பெண்களுடைய வாழ்க்கை தரம் உயரும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் ஏற்படும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று நிதானத்தோடு சிந்திப்பீர்கள். உங்களுடைய வாழ்க்கைக்கு எது நல்லது என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள். கோபப்பட்டதை எண்ணி எல்லாம் வருத்தப்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இந்த நாள் அமையும். உங்கள் தவறை நீங்கள் உணர்ந்ததற்கு, இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். நல்ல எண்ணத்தோடு உதவி செய்யலாம் தவறு கிடையாது. ஆனால் எல்லா இடத்திலும் எல்லோரையும் பாவம் என்று பார்த்து, இறக்கப்பட்டால் பிறகு, உங்களை பாவம் பார்க்க ஆள் இருக்காது. உங்களை எதிர்ப்பவர்களை நீங்கள் எதிர்த்து தான் ஆக வேண்டும். உங்களுக்கு துரோகம் நினைப்பவர்களை நீங்கள் கொஞ்சம் மடக்கி தான் ஆக வேண்டும், இல்லை என்றால் உங்கள் வாழ்க்கையில் பிரச்சனை வந்துவிடும் ஜாக்கிரதை.
SHARE