மேஷம்
மேஷ
ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகளில் சரியான பிடிப்பு இருக்காது. ஏதோ
ஒரு சந்தேகத்தோடு ஒரு வேலையை துவங்குவீர்கள். முழு நம்பிக்கையில்லாமல்
செய்யக்கூடிய வேலைகள் தோல்வியை தழுவும் ஜாக்கிரதை. கூடுமானவரை இன்று புதிய
முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். தேவையற்ற மன பயம் இருந்தால் புது
முயற்சிகளை தவிர்த்துக் கொள்ளுங்கள் பயத்தோடு எந்த வேலையும் போய்
செய்யாதீங்க.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று
நினைத்தது நடக்கும். நேரத்திற்கு நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஓய்வு
என்று உங்கள் வாழ்க்கை ராஜ உபசாரத்தோடு செல்லும். நிதி நிலைமையில் நல்ல
முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தை முன்னேற்ற அயராது உழைப்பீர்கள். ஆனால்
மனைவியிடம் சண்டை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. குடும்ப விஷயத்தில் கவனமாக
இருங்கள். குடும்ப பொறுப்புகளில் இருந்து விலகாதீர்கள்.
மிதுனம்
மிதுன
ராசிக்காரர்கள் இன்று ஆர்வத்துடன் நிறைய நல்ல விஷயங்களை துவங்குவீர்கள்.
உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். சில
பேருக்கு நீண்ட தூர பயணத்தின் மூலம் நன்மை நடக்கும். புது நண்பர்களின்
அறிமுகம் நிறைய நல்ல அனுபவத்தை கொடுக்கும். தேவையற்ற பிரச்சனைகள் தானாக
உங்களை விட்டு விலகும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு
இன்று மனதில் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும். நீங்களே சில விஷயங்களை
கற்பனை செய்து கொண்டு, அதன் மூலம் பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்வீர்கள்.
ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். அன்றாட வேலை எப்போதும் கெட்டுப்
போகக்கூடாது. அதற்கான குழப்பத்தை மனதிற்குள் கொண்டு செல்ல வேண்டாம்.
சிம்மம்
சிம்ம
ராசிக்காரர்கள் இன்று புது விஷயத்தை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதுசாக வேலை தேடிக்
கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். மேலதிகாரிகள் உங்களை
பாராட்டுவார்கள். வேலை செய்யும் இடத்திலும் எதிர்பாராத அளவு முன்னேற்றத்தை
காண்பீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும் பண பிரச்சனை
தீரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று ஒரு வேலையை
பலமுறை செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். நிறைய நேரம் வீண்விரயம் ஆகும்.
இந்த நாளின் இறுதியில் உடல் சோர்வு மனசோர்வு, உடல் பாதைகள் இருக்கவும்
வாய்ப்புகள் இருக்கிறது. புதிய முயற்சிகளை இன்று மேற்கொள்ள வேண்டாம்.
தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். அன்றாட வேலையில் மட்டும் முழு
கவனம் இருந்தால் போதும்.
துலாம்
துலாம்
ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில்
கண்ணும் கருத்துமாக முழு ஈடுபாட்டுடன் இருப்பீர்கள். உங்களிடம் ஒரு வேலையை
ஒப்படைத்து விட்டால் அதில் கவலை வேண்டாம், அப்படி என்ற எண்ணத்திற்கு
அடுத்தவர்கள் வருவார்கள். உங்களைப் போல வாழ வேண்டும் என்றும் சிலர்
நினைப்பார்கள். உயர்வு நிறைந்த இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி
சொல்லுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு
இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
பெரியவர்களின் ஆசி இறைவனின் ஆசி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும்.
இறைவழிபாடு செய்வது குடும்பத்திற்கு சந்தோஷத்தை கொடுக்கும். வீட்டில்
சுபகாரிய தடை விளக்கும். விவசாயிகளுக்கு நிறைய நல்ல விஷயங்கள் இந்த நாளில்
நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று லாபம்
நிறைந்த நாளாக இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். வியாபாரத்தை விரிவு
படுத்தலாம். வியாபாரம் விளம்பரம் சம்பந்தப்பட்ட விஷயங்களை இன்று
செய்யுங்கள். சொத்து விற்பது வாங்குவது போன்ற ஏதேனும் விவகாரங்கள்
இருந்தால், அதை இன்றைய தினம் கையில் எடுங்கள். நீங்கள் நினைத்தது
நல்லபடியாக நடந்து முடியும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள்
இன்று தேவையற்ற விஷயங்களில் தலையிட்டு ஏமாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
அடுத்தவர்களுக்கு தேவை இல்லாமல் இரக்கம் காட்டாதீர்கள். பாத்திரம் அறிந்து
பிச்சை போடு என்ற வாசகத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இன்று பாவம்
பார்த்தால் பிரச்சனை உங்களுக்கே திரும்பி விடும் ஜாக்கிரதை.
கும்பம்
கும்ப
ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். நீண்ட
நாள் குழப்பத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கும். முன்கோபத்தை குறைத்தாலே
பிரச்சனைகள் உங்களை விட்டு தானாக விலகிவிடும். எல்லா விஷயத்திலும்
அடுத்தவர்களை பற்றி மட்டும் சிந்திக்காதிர்கள். நீங்கள், உங்கள் மனைவி,
உங்கள் அம்மா அப்பா, உங்கள் குழந்தை என்று சிந்திக்கும் போது தான்
பிரச்சனையில் இருக்கும் நியாயம் புரியும்.
மீனம்
மீன
ராசிக்காரர்களுக்கு இன்று புகழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். உங்களை தேடி
வாய்ப்புகள் கதவை தட்டும். எந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது என்று
உங்களுக்கு தெரியாது. அத்தனை நன்மைகள் நடக்கும் நாளாக இந்த நாள் அமையும்.
உடல் உபாதைகள் நீங்கும். நிதிநிலைமை சீராகும். மனைவிக்கும் பிள்ளைகளுக்கும்
பிடித்த விஷயங்களை செய்து சந்தோஷம் அடைவீர்கள்.
Thursday, 13 March 2025
