மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். எவ்வளவு கடினமான வேலையை கொடுத்தாலும், குறித்த நேரத்தில் செய்து முடித்து பட்டையை கிளப்புவீங்க. சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. குடும்பத்தில் சுப காரியம் நிகழ்ச்சி துவக்க பேச்சுக்கள் நடைபெறும். சந்தோஷம் பிறக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். நீண்ட நாள் நிறைவேறாத ஆசைகள் இன்று நிறைவேறும். மனதிற்கு பிடித்த திருமண வாழ்க்கை அமையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நினைத்த நல்லது நடக்கும். எதிர்பாராத சுப செலவுகள் வரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நற்செய்தி வந்து சேரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல விஷயம் நடக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை முதலீட்டில் கவனமாக இருக்க வேண்டும். வண்டி வாகனம் ஓட்டும் போது கூடுதல் கவனம் தேவை.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று சோம்பேறித்தனம் இருக்கக் கூடாது. அன்றாட வேலையில் கவனம் செலுத்துங்கள். நாளை என்ற வார்த்தைக்கு இடம் கொடுக்காதீங்க. இன்று செய்ய வேண்டிய வேலையை இன்றே செய்து முடிப்பது நல்லது. உறவுகளோடு பேசும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று புது விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். புது வேலை தேடுவது, மாணவர்கள் புதுப்புது விஷயங்களை தேடித்தேடி படிப்பது, போன்ற அனைத்து நன்மைகளையும் செய்வீர்கள். திறமை வெளிப்படும் நாள். அறிவை வளர்த்துக் கொள்ளக் கூடிய நாளாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். சாந்தமான நாளாக இருக்கும். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இருக்காது. வேலையும் வியாபாரமும் சிறப்பாக நடக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். மன நிம்மதி கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். சேமிப்பை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். அனாவசியமாக வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். நண்பர்களோடு குழந்தைகளோடு உறவுகளோடு கூட இன்று ஷாப்பிங் போகாதீங்க. பிறகு பிரச்சனை தான் பார்த்துக்கோங்க. மற்றபடி வியாபாரம் வேலை எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று குழப்பமும் சிக்கலும் கொஞ்சம் இருக்கும். யோசனை நிறைந்த நாளாக இருக்கும். எந்த வேலையை எப்படி செய்வது என்று தெரியாமல் கொஞ்சம் திக்கு முக்காட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வேலை பளு அதிகமாக இருக்கும். மனதை அமைதிப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். முடிந்த வேலைகளை மட்டும் செய்து, முடியாத வேலைகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. ரொம்பவும் டென்ஷன் ஆக வேண்டாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். யாராலும் முடிக்க முடியாத வேலைகளை கூட நீங்கள் சுலபமாக செய்து முடிப்பீர்கள். அடுத்தவர்களுடைய பிரச்சனையை தீர்த்து வைப்பீர்கள். பேச்சு திறமை வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். வழக்கறிஞர், ஆசிரியர், பாடகர்கள் இதுபோல தொழிலில் உள்ளவர்களுக்கு இன்று சிறப்பான பாராட்டுகளும் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். என்ன செய்வது என்று தெரியாமல் பிரச்சனையில் சிக்கி இருப்பவர்களுக்கு கூட, நல்லதொரு தீர்வு கிடைக்கும். கடவுள் உங்களுக்கு ஆசீர்வாதத்தை கொடுக்கக் கூடிய நாளாக இந்த நாள் அமையும். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் திறமையாக செயல்படுவீர்கள். பிரச்சனைகளை உங்கள் பக்கம் தள்ளிவிடலாம் என்று நினைப்பார்கள், எதிரிகளுடைய போக்கை சரியாக புரிந்து கொள்வீர்கள். யாரிடம் எப்படி நடந்து கொள்வது என்ற சூட்சமம் உங்களுக்கு தெரியும். பெரிய பெரிய பிரச்சனைகளை கூட சுலபமாக எதிர்கொண்டு கையாள செய்தீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். புது மனிதர்களுடைய சந்திப்பு புது அனுபவங்களை கொடுக்கும். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு இருக்க வேண்டும். வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.