Sunday, 9 March 2025

இன்றைய ராசிபலன் - 09.03.2025..!!!

SHARE

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். நீண்ட நாட்களாக வராமல் இழுப்பறியாக இருந்த பணவரவு இன்றைய தினம் உங்கள் கையை வந்து சேரும். உங்களுடைய கடன் பிரச்சனையில் இருந்தும் நீங்கள் வெளி வருவீர்கள். உங்களுக்கு யார் நல்லது செய்தார்களோ, அவர்களுக்கு நன்றி கடனோடு சில உதவிகளையும் கைமாறாக செய்து விடுவீர்கள். இன்று இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஆச்சரியங்களும் அதிசயங்களும் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத வகையில் உங்களுக்கு நல்லது நடக்கும். திடீர் பிரமோஷன், திடீர் வெளிநாடு பயணம் திடீர் திருமணம் என்று எல்லாம் அதிரடியாக நடக்கப்போகிறது. எல்லா அதிரடியும் நல்லபடியாக தான் நடக்கும் என்ஜாய் பண்ணுவீங்க.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு மனதில் தேவையற்ற பயம் பதட்டம் இருக்கும். விடுமுறை நாளை கூட சந்தோஷமாக என்ஜாய் பண்ண மாட்டீங்க. ஏதோ ஒரு கெட்ட எண்ணம் மனதிற்குள் வந்து கொண்டே இருக்கும். நல்ல தூக்கம் இருக்காது. மன அமைதி இல்லாத சூழ்நிலை நிலவும். இதிலிருந்து வெளிப்பட வேண்டும் என்றால் இறை வழிபாடு செய்வது மட்டும்தான் ஒரே வழி.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தேவையற்ற பகை ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. உறவுகளோடு ஜாக்கிரதையாக பேசி பழகுங்கள். தேவையற்ற விஷயங்களில் தலையிடாதீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் மட்டும் போதும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல ஓய்வு நிறைந்த நாளாக இருக்கும். முதியவர்களுடைய ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் உபாதைகள் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாள். விடுமுறை நாள் என்று கூட பார்க்காமல் உங்களுடைய வேலைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். மேல் இடத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தேவையான அத்தனை நல்லதும் இன்றைய தினம் நடக்கும். வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். சந்தோஷத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு அதிகமாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டை சுத்தம் செய்வது, பழுதான பொருட்களை சரி செய்வது, என்று அத்தனை வேலைகளையும் பம்பரம் போல சுழன்று செய்வீர்கள். வீட்டில் இருக்கும் ஆண்கள் உங்களுடைய வண்டியை பழுது பார்ப்பது மனைவிக்கு உதவி செய்வது போன்ற ஆக்கபூர்வமான வீட்டு வேலைகளில் அக்கறை காட்டுவீர்கள். இன்றைய நாள் பொறுப்பு நிறைந்த சந்தோஷம் நிறைந்த நாளாகவும் இருக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த நாள் ரிலாக்ஸ் ஆன நாளாக இருக்கும். எல்லா வேலையும் முடித்துவிட்டு குடும்பத்திற்காகவே இந்த விடுமுறை நாளை நீங்கள் ஒதுக்கி வைத்து இருப்பீர்கள். சுப செலவுகள் உண்டு. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுடைய மனதில் என்ன இருக்கிறது என்பதை பெற்றவர்கள் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட நல்ல லாபத்தையும் அடைவீர்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். பிள்ளைகளுடைய எதிர்காலத்திற்கு சேமிப்பை துவங்கலாம். நகை சீட்டு போடலாம்‌. இதுபோல சேமிப்புக்கு உண்டான பிள்ளையார் சுழியை இன்று போடுங்கள் நல்லது நடக்கும். வண்டி வாகனம் ஓட்டும்போது அதிக சிந்தனை வேண்டாம்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். எளிதில் ஜீரணம் ஆகாத உணவு பண்டங்களை எடுத்துக் கொள்ள வேண்டாம். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். நிறைய தண்ணீர் குடித்து உடம்பை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். நிதானம் தேவை. முன்கோபத்தை குறைக்க வேண்டும். பொறுமையாக இருந்தால் இந்த நாள் நல்லபடியாக இருக்கும். பொறுமையை இழந்தவர்களுக்கு பிரச்சினைகள் வரும் ஜாக்கிரதை.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். பிரச்சனைகளை எல்லாம் சரி செய்வதில் நீங்கள் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். அடுத்தவர்களுடைய நலனில் அக்கறை கொள்வீர்கள். மன மகிழ்ச்சியான செய்தி ஒன்று தொலைபேசி மூலம் வரும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமை உயரும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று பொறுப்புகள் அதிகமாக இருக்கும். விடுமுறை நாளாகவே இருந்தாலும் அலுவலகப் பணி வியாபாரம் என்று உங்களுக்கான இந்த நாள் ரொம்பவும் பிசியாக இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. உங்களுடைய கடின உழைப்புக்கு ஏற்ற பாராட்டும் கிடைக்கும். நீண்ட நாள் கழித்து ஒரு மனநிறைவு, ஒரு சந்தோஷம் உங்களுக்கு கிடைக்கும் பாருங்க.
SHARE