Saturday, 8 March 2025

இன்றைய ராசிபலன் - 08.03.2025..!!!

SHARE


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு, மனதிற்கு பிடித்த நபரிடம் சேரக்கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். வேலை தொழில் குடும்பம் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனை இருந்தாலும், அதற்கான ஒரு முடிவை இன்று நீங்கள் தாராளமாக எடுக்கலாம். நல்லதே நடக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிகாகாரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். தேவையற்ற எதிர்ப்புகளின் மூலம் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மாணவர்கள் இளைஞர்கள் பெற்றவர்களிடம் ஏதாவது அனுமதி கேட்க வேண்டும் என்றாலும், அந்த விஷயத்தை நாளை தள்ளி வையுங்கள். இன்று அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வங்கி கணக்கு துவங்கலாம். புதுசாக சீட்டு போடலாம். நீங்கள் இன்று துவங்கும் காரியங்கள் உங்களுக்கு எதிர்காலத்திலும், நல்ல லாபத்தை கொடுக்கும். வேலையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணத்தின் போது மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன கஷ்டம் இருக்கும். தேவையற்ற பிரச்சனைகள் வரும். துன்பங்கள் சூழக்கூடிய நாளாகவும் இருக்கும். கூடுதல் கவனத்தோடு இருந்து கொள்ளுங்கள். குலதெய்வத்தை வழிபாடு செய்யுங்கள். நல்லதே நடக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து கூடக்கூடிய நாளாக இருக்கும். வெற்றிவாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வெளிநாட்டில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல வாய்ப்பு இருக்கிறது. சினிமா துறையில் இருப்பவர்கள், கலைத்துறையில் இருப்பவர்களுக்கெல்லாம் இன்று நல்ல முன்னேற்றம் தரும் நாளாக அமையும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று ஆர்வத்தோடு இருப்பீர்கள். எல்லா வேலையிலும் சுறுசுறுப்பு இருக்கும். சோம்பேறித்தனத்திற்கு அடிமையாகவே மாட்டீர்கள். நீங்கள் வாழ்க்கையில் முன்னேறுவது மட்டுமல்லாமல், உங்கள் உடன் இருப்பவர்களையும் வாழ்க்கையில் முன்னேற்றி விடுவீர்கள். அடுத்தவர்களுடைய பிரச்சனை பற்றி சிந்திக்கவும் செய்வீர்கள். நல்லதே நடக்கும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக இருக்கும். சுறுசுறுப்பு இருக்காது. அடுத்தவர்களுடைய உதவியை எதிர்பார்ப்பீர்கள். வியாபாரத்திலும் வேலையிலும் சின்ன சின்ன பின்னடைவு இருக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வர வாய்ப்புகள் உள்ளது. ஜாக்கிரதியாக இருந்து கொள்ளுங்கள். உங்களுடைய வேலைகளை, உங்களுடைய பொறுப்பை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். கவனம் இருக்கட்டும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மறதியால் பிரச்சனைகள் வரும். முக்கியமான வேலைகளை மறந்துவிட்டு, திரும்பவும் வீட்டுக்கு வருவது, முக்கியமான பொருட்களை கைமறதியாக வேறு எங்கேயாவது வைத்துவிட்டு தேடுவது, என்று சில பல பிரச்சனைகள் வரலாம். முக்கியமான டாக்குமெண்ட், விலை உயர்ந்த பொருட்களில் கவனம் இருக்கட்டும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை இருக்கும். காலரை தூக்கி விட்டு தலை நிமிர்ந்து செல்லும் அளவிற்கு நிறைய நல்லது நடக்கும். எதிரிகளிடம் ஜெயித்து காட்டுவீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உன்னால் எதுவுமே முடியாது, உன்னால் எதுவுமே செய்ய முடியாது என்று உங்களை தாழ்த்தி பேசியவர்கள் முகத்தில் கறியை பூசுவீர்கள். முன்னேற்றம் நிறைந்த நாள் இது.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று ஆக்கபூர்வமாக நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். புத்துணர்ச்சியோடு இருப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவியாக இருப்பீர்கள். சுயநலம் பார்க்காமல் சிந்திப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்தும் நினைத்ததை விட நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் அதிகமாக இருக்கும். பொறுமையாக இருக்க வேண்டிய நாள் இது. குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஏதாவது முடிவு எடுப்பதாக இருந்தால் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். அவசரப்படாதீர்கள், சிந்தித்து செயல்படுங்கள். உங்களுடைய நலனுக்கு எது தேவையோ, அதை மட்டும் செய்தால் போதும். வீம்பு பிடித்துக் கொண்டு அடுத்தவர்களை வீழ்த்த வேண்டும் என்பதற்காக இந்த நாளில் எந்த சிந்தனையும் வேண்டாம்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று நீண்ட தூர பயணம் இருக்கும். தேவையற்ற அலைச்சல் இருக்கும். குடும்பத்தை விட்டு, பிரிய வேண்டிய சூழ்நிலையும், சில பேருக்கு உண்டாகும். தற்காலிகமான பிரிவுதான். வேலை விஷயமாக வெளியூர் செல்ல வாய்ப்புகள் இருக்கிறது. உடைமைகளை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். உடல் சூடு சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை ஜாக்கிரதை.
SHARE