Friday, 7 March 2025

இன்றைய ராசிபலன் - 07.03.2025..!!!

SHARE


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதியான நாளாக இருக்கும். ஆன்மீகத்தில் மனது ஈடுபடும். இறைவழிபாடு உங்களுக்கான நல்ல வழியை காட்டிக் கொடுக்கும். தேவையில்லாத பிரச்சினைகள் தானாக விளக்கும். நிதி நிலைமை சீராகும். கடன் சுமைதிலிருந்து வெளி வருவீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. முன்பின் தெரியாத நபரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். வியாபாரத்திலும் வேலையிலும் கூடுதல் அக்கறையோடு நடந்து கொள்ளுங்கள்.


மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த லாபம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் வராது என்று நினைத்த பணம் உங்கள் கையை வந்து சேரும். கோர்ட்டு கேஸ் வழக்குகளில் அமோகமான வெற்றி கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. கண் திருஷ்டி விழாமல் இருக்க சில விஷயங்களை மறைத்து பேசினாலும் இன்று தவறு கிடையாது.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். தேவையற்ற டென்ஷன் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அனாவசியமாக யாரிடமும் பேசாதீர்கள். வார்த்தையில் கவனம் கொள்ளுங்கள். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். உரிமையில் கூட எந்த வார்த்தையையும் கூடுதலாக பேச வேண்டாம். கவனம் இருக்கட்டும்.



சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வேலையில் அதிக அக்கறை இருக்கும். கடமையில் கண்ணும் கருத்துமோடு நடந்து கொள்வீர்கள். மேலிடத்தில் நல்ல பெயரும் வாங்குவீர்கள். வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என்று சொல்வார்கள் இல்லையா. அதுபோல உங்களுடைய பொறுப்புணர்ச்சி இன்று அதிகப்படியாக வெளிப்படும். வியாபாரத்திலும் கூடுதல் உழைப்பு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலையில் கவனம் செலுத்தினால் போதும். சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் உங்கள் வாழ்க்கையில் பின்னடவை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது. மனதை தளர விடக்கூடாது. இறைவனின் மீது பாரத்தை போட்டு இன்றைய நாளை கடந்து செல்லுங்கள்.



துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். தேவையற்ற டென்ஷன்கள் குறையும்‌. வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான சூழ்நிலை இருக்கும். எந்த பிரச்சனையும் பெருசாக இல்லை. ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். நீண்ட தூர பயணங்கள் கூட நன்மையில் முடியும். நிறைய தண்ணீர் குடிக்கவும். அதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம். உடல் சூடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். அன்பு வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். அன்பை பெறக்கூடிய நாளாக இருக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும்‌. நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்திக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. மனதிற்குள் லேசாக சில பேருக்கு பட்டாம்பூச்சி பறக்கும். இளைஞர்களுக்கு இந்த நாள் கூடுதல் இனிமையான நாளாக இருக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனம் நிறைவான நாளாக இருக்கும். எல்லா வேலைகளையும் சந்தோஷமாக செய்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்த நல்லது நடக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். சுப செலவுகள் உண்டாகும். வருமானமும் பெருகும். மனைவிக்கு மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். விட்ட சவாலில் ஜெய்த்து காட்டுவீர்கள். எதிரிகள் முன்பு தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய தருணங்கள் உண்டாகும். கடன் சுமையிலிருந்து வெளி வருவீர்கள். சேமிப்பை உயர்த்துவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் மனம் மகிழ்ச்சியும் உண்டு.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தோடு நேரத்தை அதிகமாக செலவு செய்தீர்கள். நீண்ட தூர பயணம் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது. செலவுகளை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை உண்டாகும். அடுத்தடுத்து செலவுகளை சமாளிக்க சில பேர் கடனும் வாங்கலாம். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். வாழ்க்கைத் துணையிடம் எதையும் மறைக்க வேண்டாம். இருவர் மனதில் உள்ளதை வெளிப்படையாக பரிமாறிக் கொள்வது நல்லது.
SHARE