மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்கள் வரக்கூடிய நாளாக இருக்கும். இதுநாள் வரை உயர் பதவிக்காக காத்துக் கொண்டிருந்த உங்களுக்கு, நல்ல பதவி கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. மன நிம்மதியை அடைவீர்கள். குடும்ப ஒற்றுமை ஏற்படும் சுப செலவுகள் உண்டாகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நல்லது நடக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கை வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் உதவியாக நண்பர்கள் இருப்பார்கள். பிரச்சனை என்று வரும்போது, கை தூக்கி விட நாலு பேர் இருக்காங்க என்ற மனதிருப்தி, உங்களை வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும். நேர்மையை கடைப்பிடியுங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று சுயநலமாக சிந்திப்பீர்கள். உங்களுடைய வெற்றிக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அந்த சூட்சமங்களை எல்லாம் தேடிக் கண்டுபிடித்து செய்வீர்கள். அடுத்தவர்கள் நலனில் அக்கறை கொள்ளவில்லை என்று, மன வருத்தம் கொஞ்சம் கூட இருக்காது. இதனால் எதிர் காலத்தில் பிரச்சனைகள் வரும். கொஞ்சம் அடுத்தவர்களுடைய நலனுக்காகவும் இன்று சிந்திப்பது புண்ணியத்தை சேர்க்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். வேலையை சரியாக செய்து முடிக்க முடியுமா என்ற பதட்டமும் இருக்கும். வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். பதட்டப்பட வேண்டாம். இறைவனின் மீது நம்பிக்கை வையுங்கள். நேரத்தை வீணடிக்காமல் முயற்சி செய்தால், உங்களுடைய வேலைகள் எல்லாம் சரியாக நடக்கும்.
சிங்கம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பகை பிரச்சினை எதிரிகள் தொல்லை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கூடுதல் கவனத்தோடு செயல்படுங்கள். அனுபவசாலிகளின் பேச்சை கேட்க வேண்டும். அடம் பிடித்து எந்த ஒரு வேலையையும் செய்யக்கூடாது. வியாபாரத்தில் அகலக்கால் வைக்க வேண்டாம். ஆரோக்கியத்தையும் கொஞ்சம் கவனம் செலுத்தவும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எந்த ஆர்ப்பாட்டமும் இருக்காது. உங்களுடைய வேலைகள் எல்லாம் சுமூகமாக செல்லும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயரை வாங்கி விடுவீர்கள். வீட்டில் பிள்ளைகளுக்கும் வாழ்க்கை துணைக்கும் தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வியாபாரம் நல்லபடியாக செல்லும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று காலை எழுந்தது முதலே உங்களுடைய காரியத்தில் கண்ணும் கருத்துமாக நடந்து கொள்வீர்கள். ஒரு வேலையை உங்கள் கையில் கொடுத்தால், அது வெற்றிகரமாக முடிந்து விட்டது என்று வைத்துக் கொள்ளலாம். அந்த அளவுக்கு உங்களுடைய வேலையில் நேர்மையும் உழைப்பும் இருக்கும். இந்த நாள் இனிய நாளாகவே அமைய இறைவனை பிரார்த்திக்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். புது வேலை தேடுவது, புது தொழில் தொடங்குவது போன்ற வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நேரத்தை வீணடிக்க கூடாது. தேவையற்ற நண்பர்களிடம் இருந்து ஒதுங்கியிருங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மனு உறுதி இருக்கும். எவ்வளவு பிரச்சனை வந்தாலும் சமாளிக்கலாம் என்ற தைரியம் மட்டும் உங்களை விட்டு அகலாது. தன்னம்பிக்கையான இந்த நாளில் பல நல்ல அனுபவங்களும் கிடைக்கும். பல எதிர்மறையான அனுபவங்களும் கிடைக்கும். அனுபவங்களை வாழ்க்கைக்கு பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள். சோர்ந்து போகும் நேரத்தில் நல்ல சாப்பாடு சாப்பிடுங்கள். உற்சாகம் வந்துவிடும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று பெருமையான நாளாக இருக்கும். வாழ்க்கையில் நிறைய விஷயங்களில் ஜெயித்து, தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமையும். எதிரிகள் முன்பு சவால் விட்டதில் ஜெயித்து காட்டுவீர்கள். கடவுளின் ஆசிர்வாதமும் பெரியவர்களின் ஆசீர்வாதமும் உங்களுக்கு கிடைக்கும். கடன் சுமை குறையும். அடமானத்தில் இருந்த பொருட்களை மீட்கவும் வாய்ப்புகள் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போராட்டம் நிறைந்த நாளாக தான் இருக்கும். எவ்வளவு பிரச்சனை வந்தாலும் உங்கள் பொறுமையை மட்டும் இழக்க மாட்டீர்கள். எல்லா பிரச்சனையையும் கடவுள் பார்த்துக் கொள்வான் என்று நம்பிக்கையில் உங்களுடைய வேலையை மட்டும் செய்வீர்கள். ஆனால் பிரச்சனைகள் சூழ்ந்த நாளாக தான் இந்த நாள் செல்லும். இருந்தாலும் இறையருள் உங்களை காப்பாற்றி விடும். கவலைப்பட வேண்டாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறது. நிதிநிலைமை சீராக இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுக்கான கடமைகளை சரிவர செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம், குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வியாபாரத்தில் கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும் அவ்வளவுதான்.