மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலை தேடலாம். புதுசாக வாடகைக்கு வீடு பார்ப்பதாக இருந்தால் பார்க்கலாம். நல்ல காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். வேலையில் கொஞ்சம் கூடுதல் கவனம் இருக்கட்டும். யார் என்ன சொன்னாலும் காதில் வாங்கிக் கொள்ளாமல், உங்களுடைய கடமைகளை மட்டும் செய்யுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் செலவுகள் அதிகமாக இருக்கும். கையில் இருக்கும் பணம் கரைந்து போகும். மாத தொடக்கத்திலேயே இந்த நிலைமையா என்ற கஷ்டம் மனதிற்குள் இருக்கும். கவலைப்படாதீங்க. எல்லாம் ஒருநாள் சரியாகும். அனாவசிய செலவுகளை மட்டும் குறைத்துக் கொள்வது நன்மையை தரும். மற்றபடி வியாபாரம் வேலை எல்லாம் நல்லபடியாகத்தான் செல்லும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட கூடுதல் பொறுப்புகள் இருக்கும். கடமைகளை சரியாக செய்து முடிக்க கூடுதல் முயற்சி தேவை. சோம்பேறித்தனம் இருக்கக் கூடாது. குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் உங்களுடைய வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து நடக்க வேண்டும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இந்த நாள் புது அனுபவங்கள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருந்தாலும், உங்களுக்கான திறமை வெளிப்படும் நாளாக இருக்கப் போகிறது. புது வாய்ப்புகள் வந்தால் கைநழுவ விடாதீர்கள். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால், நிச்சயம் வாழ்க்கையில் முன்னேற்ற பாதைக்கு வழி கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருங்கள். வார்த்தைகளை அனாவசியமாக பேசாதீர்கள். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனத்தை காட்டுங்கள். தேவையற்ற நண்பர்களிடமிருந்து விலகியே இருங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனமான நாளாக இருக்கும். வேலைகள் சுறுசுறுப்பாக நடக்கவே நடக்காது. இதனால் மேலதிகாரிகளோடு வாக்குவாதம் திட்டுவாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். சில பேருக்கு வேலையில் பிரச்சினை வரவும் வாய்ப்புகள் இருக்கிறது. கவனமாக இருக்க வேண்டிய நாள் இது. இறைவனின் மீது நம்பிக்கை வைத்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நல்லது நடக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். சோம்பேறித்தனத்தோடு நடந்து கொள்ளக் கூடாது. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். விரைய செலவுகள் குறையும். சேமிப்பு அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். யாரை நம்பியும் ஜாமீன் கைஎழுத்து போட வேண்டாம். வியாபாரத்தைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்களை கண்மூடித்தனமாக நம்பி கடனுக்கு வியாபாரம் செய்யாதீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று அலைச்சல் கொஞ்சம் அதிகமாக இருக்கும். வீட்டு வேலை அலுவலக வேலை என்று எல்லாம் உங்கள் தலைமையில் வந்து விழும். நேரம் அதிகமாக இருப்பது போல தெரியும். ஆனால் ஒரு வேலையையும் உருப்படியாக செய்ய முடியாது. இதனால் வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன பின்னடைவுகள் வரலாம். கவலைப்படாதீங்க எல்லாம் சரியாகிவிடும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் இருக்கும். உங்களுடைய வேலையை தடுப்பதற்காகவே சில பேர் சூழ்ச்சி செய்வார்கள். எதிரிகளால் தொல்லை இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைகாது. கடின உழைப்பை போட்டும் நல்ல பெயர் எடுப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் தவித்து வருவீர்கள். மனதை தளர விடாதீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று தெளிவாக சிந்திப்பீர்கள். எந்த குழப்பமும் உங்களுக்கு இருக்காது. வேலை வியாபாரம் வீடு என்று அதற்கான நேரத்தை சரியாக ஒதுக்கி விடுவீர்கள். நிதிநிலைமை மேலோங்கும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். எதிரிகளோடு எச்சரிக்கை தேவை.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று நீண்ட தூரம் பயணம் செய்ய வாய்ப்புகள் இருக்கிறது. தேவையற்ற அலைச்சல் இருக்கும். வீண் விரைய செலவுகளும் இருக்கும். இந்த நாளில் சில பல எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இருந்தாலும் இந்த நாள் இறுதியில் உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடித்திருப்பீர்கள். போராட்டமான வாழ்க்கை ருசிகரமான வாழ்க்கையாகவும் செல்லும்.