Monday, 3 March 2025

இன்றைய ராசிபலன் - 03.03.2025..!!!

SHARE


மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். ஒரு வேலையை கையில் எடுத்தால் அதை சரியாக முடிக்க வேண்டும் என்று அயராது உழைப்பீர்கள். உழைப்புக்கு ஏற்ற நல்லதும் உங்களை வந்து சேரும். நீண்ட நாள் கஷ்டங்கள் உங்களை விட்டு விலகும். நல்லது நடக்கும் நாளாக அமையும். புது வேலையை முயற்சிக்கலாம்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள முடியாமல் கஷ்டப்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் தர்மசங்கடமான சூழ்நிலை நிலவ வாய்ப்புகள் இருக்கிறது. வியாபாரத்திலும் பாட்னரோடும் வாடிக்கையாளரோடும், நிதானத்தோடு நடந்து கொள்ள வேண்டும். எந்த விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவெடுக்காதீங்க. பயம் பதட்டம் பிரச்சினையை கொண்டு வந்து விடும்.

 

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வார துவக்க நாளே சுமுகமான நாளாக அமையும். எந்த ஒரு அலைச்சாலும் இருக்காது. உங்களுடைய வேலைகள் எல்லாம் சரியாக நடக்கும். அதே சமயம் நிம்மதியான நாளாகவும் இந்த நாள் இருக்கும். நேரத்திற்கு சாப்பிட்டு, நேரத்திற்கு தூங்கி, நேரத்திற்கு ஓய்வு எடுத்து இந்த நாள் நகர்ந்து செல்லும்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கக்கூடிய நாள். புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாம். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். பாராட்டும் புகழும் கிடைக்கக்கூடிய நாளாக அமையும். மனதிற்கு ஒரு விதமான திருப்தி கிடைக்கும். அது போதும். இறைவனுக்கு நன்றி சொல்லலாம்.

 

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தனலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். விளம்பரம் செய்யலாம். சின்ன சின்ன வியாபாரிகள் இன்று மேற்கொள்ளும் முயற்சிகள் கூட பெரிய அளவில் வெற்றி காணும். நீண்ட நாள் வாராக்கடன் வசூல் ஆகும். சொத்து சுகம் சேரக்கூடிய வாய்ப்புகளும் இருக்கிறது.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும் உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்வீர்கள். எதிலும் ஜெயிக்கலாம் என்ற தன்னம்பிக்கை பெருக்கும். உற்சாகத்தோடு இருப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிறைவான நாளாக இருக்கும். உறவுகளோடு ஒற்றுமை ஏற்படும்.

 

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருக்க வேண்டும். அவசரப்படக்கூடாது. நண்பர்களோடு சேர்ந்து நேரத்தை வீணாக செலவழிக்க கூடாது. குறிப்பாக மாணவர்கள், தேர்வு எழுதும் மாணவர்களாக இருந்தால் நீங்கள் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். படிப்பில் அக்கறை காட்ட வேண்டும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று பதட்டம் நிறைந்த நாளாக இருக்கும். எல்லா வேலையிலும் ஒரு அவசரம் இருக்கும். நேர பற்றாக்குறை இருக்கும். கூடுமானவரை இந்த நாளை சீக்கிரம் துவங்குங்கள். எல்லா வேலையும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே துவங்க வேண்டும். இறுதி நேரத்தில் அவசரப்படுவதன் மூலம் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் இருக்கிறது.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மறதியால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. முக்கியமான வேலைகளை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் முக்கியமான விஷயங்கள் தவறி விடும். பிறகு நல்ல வாய்ப்புகளும் கைவிட்டுப் போகும். ஜாக்கிரதை. மனதை ஒருநிலைப்படுத்துங்கள். தேவையற்ற விஷயங்களில் ஞாபகத்தை செலுத்த வேண்டாம்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துவீர்கள். பணிவோடு இருப்பீர்கள். உங்களுடைய அடக்கம் நிறைய நல்ல அனுபவத்தை கொடுக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பை கொடுக்கும். இன்று நீங்கள் எடுக்கும் நல்ல பெயர் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக இருக்கும். வேலையை தொடங்குவதற்கு முன்பே அசதி இருக்கும். நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது நல்லது. தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். வேலை தொழில் எல்லா விஷயங்களிலும் ரொம்பவும் அக்கறையாக இருப்பீர்கள். மேலதிகாரிகளுடைய ஆதரவை பெறுவீர்கள். உங்கள் கையில் ஒரு வேலையை ஒப்படைத்தால் அது சரியாகத்தான் முடியும் என்ற நம்பிக்கை அடுத்தவர்களுக்கு வரும். நீங்கள் மட்டும் பொறுப்போடு இருப்பதல்லாமல், உங்களுடன் இருப்பவர்களையும் பொறுப்போடு மாற்றி புண்ணியத்தை சேர்த்துக் கொள்வீர்கள்.
SHARE