மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சாதனை படைக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகளில் நீங்கள் ரொம்பவும் சரியாக இருப்பீர்கள். நேர்மையாக நடந்து கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்வீர்கள். நல்ல பெயர் கிடைக்கும். வாழ்க்கையின் வெற்றியாளராக கருதப்படக் கூடிய அத்தனை குணாதிசயங்களும் உங்களிடம் இருந்து வெளிப்படும். இந்த நாள் நினைத்தது நடக்கும் நாள் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த நாள் முழுவதும் கடின உழைப்பு இருக்கும். எடுத்த வேலையை முடித்தே ஆக வேண்டும் என்று விடாமுயற்சியோடு ஈடுபடுவீர்கள். உழைப்பு வீண் போகாது. இந்த நாள் இறுதியில் வெற்றி உங்களுக்கே. குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வருமானம் பெருகும். சுப செலவுகள் உண்டாகும். மன நிம்மதி கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் பொறுமையாக நடந்து கொள்வீர்கள். எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் சரி, எவ்வளவு பெரிய பணி உங்கள் மீது வந்தாலும் சரி, அதிலிருந்து எப்படி வெளிவருவது என்று நிதானமாக சிந்திப்பீர்கள். ஒரு பக்குவமான மனிதனிடம் என்ன எல்லாம் திறமை இருக்குமோ, அதெல்லாம் உங்களிடமிருந்து வெளிப்படும் நாள் இன்று. அமைதியின் ஆழம் என்ன அமைதியாக இருந்தால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்று நீங்கள் நன்றாக புரிந்து கொள்வீர்கள்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று சந்தோஷம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற சன்மானம் கிடைக்கும் நாளாக இருக்கும். இன்று ஒரு சின்னதாக சாதனை படைக்கப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். மனதிற்குள் அவ்வளவு பட்டாம்பூச்சி பறக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். இறைவனுக்கு மறக்காமல் நன்றி சொல்லுங்கள். உங்களால் முடிந்த உதவியை இயலாதவர்களுக்கு செய்யுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். மாணவர்களுக்கு கல்வி சம்பந்தப்பட்ட உதவிகள் நிறைய கிடைக்கும். எதிர்பாராத பண வரவு மனதிற்கு அமைதியை கொடுக்கும். நிறைய நல்ல விஷயங்கள் நல்ல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வியாபாரத்திலும் நல்ல லாபம் இருக்கும். இந்த நாள் இனிமையான நாளாக அமைந்ததற்கு குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் பொறுமையாக இருப்பீர்கள். வேலையில் டென்ஷன், வியாபாரத்தில் டென்ஷன், குடும்பத்தில் சண்டை வந்தாலும் அதை எதிர்கொள்வதில் கொஞ்சம் கூட சலிப்பு இருக்காது. நம்முடைய குடும்பம், நம்முடைய வியாபாரம், நம்முடைய வேலை என்று உங்களுடைய பக்குவம் மேலோங்கும். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும் நாள் இன்று.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று நேர்மையாக நடந்து கொள்வீர்கள். கோடி ரூபாய் கொடுத்தாலும் குறுக்கு பாதையை தேர்ந்தெடுக்க மாட்டீர்கள். இந்த நேர்மை வாழ்க்கையில் உங்களை உயரத்தில் கொண்டு செல்லவிருக்கிறது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் சண்டைகள் ஒரு முடிவுக்கு வரும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று யோசனை கொஞ்சம் பலமாக இருக்கும். எந்த வேலையை செய்வதாக இருந்தாலும் ஒன்றுக்கு பலமுறை சிந்திப்பீர்கள். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் கொஞ்சம் வரும். எந்த முடிவு எடுப்பது என்று தெரியாமல் தடுமாற்றம் இருக்கும். புதிய முயற்சிகளை இன்று மேற்கொள்ள வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட முடிவுகள் எதுவும் இன்று எடுக்க வேண்டாம். அனுபவ சாலிகளின் பேச்சை கேட்கவும். அடம்பிடித்து எந்த காரியத்தையும் இப்பவே செய்யணும்னு நினைக்காதீங்க.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் இருக்கும். யாராலும் செய்ய முடியாத வேலையை நீங்கள் செய்வீர்கள். நேரம் காலம் பார்க்காமல் உழைப்பீர்கள். இதற்கான பாராட்டுகளும் உங்களுக்கு கிடைக்கும். மன நிறைவாக இருப்பீர்கள். சில பேருக்கு சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. முன்னேற்றம் நிறைந்த இந்த நாளில் இறைவனுக்கு நன்றி சொல்ல மறக்க வேண்டாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று புகழ்ச்சி இருக்கும். ஆனால் முகத்திற்கு முன்பு வந்து நேராக கொஞ்சம் ஐஸ் வைத்து பாராட்டுபவர்களை நம்பாதீர்கள். குறைகளை முகத்திற்கு நேராக சொல்லுபவர்களை நம்பலாம். நம் முன்னாலேயே புகழ் பாடுபவர்களை என்றும் நம்பக்கூடாது. அதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களை காக்கா பிடித்து சாதிப்பதற்கு நாலு பேர் கூடவே சுத்துவாங்க. ஜாக்கிரதையாக இருக்கணும். இன்று புகழ்ச்சிக்கு நீங்கள் மயங்கவே கூடாது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி தான். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். தேவையற்ற பணக்கஷ்டம் உங்களை விட்டு தானாக விலகும். வருமானம் உயரும். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் மன கஷ்டம் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. குடும்ப உறவுகளை பிரிந்து இருக்கக்கூடிய சூழலும் சில பேருக்கு இருக்கும். அதெல்லாம் கொஞ்ச நாளில் சரியாகிவிடும் கவலைப்படாதீங்க.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் எடுக்க வேண்டும். கொஞ்சம் ஓய்வு தேவை. அலைச்சல் அதிகமாக இருக்கும் சமயத்தில் உடம்பை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். உடல் சூடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு கொஞ்சம் வாய்ப்புகள் இருக்கிறது. ஜாக்கிரதை மற்றபடி உங்களுடைய வேலை தொழில் வருமானம் எல்லாம் சீரும் சிறப்புமாக இருக்கும்.