
அரசாங்கத்தின் அனைத்து சொகுசு வாகனங்களும் ஏலத்தில் விடப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அத்துடன் சுற்றுலாப் பயணிகளுக்கான டிஜிட்டல் டிக்கெட் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன இறக்குமதி அனுமதி வழங்கப்படாது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்