கீரிமலை தேர்த்திருவிழா..!!!
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம், கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரப்பெருமான் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் தேர்த்திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.
காலை 7.30 மணியளவில் வசந்த மண்டப பூசை இடம்பெற்று காலை.10 .30 மணியளவில் நகுலாம்பிகாதேவி சமேதராக நகுலேஸ்வரப் பெருமான் இரதத்திலே ஆரோகணித்து பக்தர்களுக்கு திருவருள் புரிந்தார்.
தேர்த் திருவிழாவிற்கு பெருந்தொகையான அடியார்கள் பங்குபற்றி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.