Monday, 10 February 2025

மின்வெட்டு நேர அட்டவணை வெளியீடு..!!!

SHARE


நாளாந்த மின் தடை அமுலாக்கப்படவுள்ள கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை ஊடக அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

இன்றும் நாளையும் நாளொன்றில் தலா ஒன்றரை மணிநேரம் சுழற்சி முறையில் மின் விநியோகத் தடையை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

இதன்படி, A,B,C,D ஆகிய வலயங்களில் பிற்பகல் 3.30 முதல் 4 மணிக்குள் மின் விநியோகத் தடை அமுலாக்கப்பட்டு 5 மணி முதல் 5.30 வரையான காலப்பகுதிக்குள் மீளிணைக்கப்படும்.

E,F,G,H,U,V ஆகிய வலயங்களில் பிற்பகல் 5 மணி முதல் 5.30க்குள் மின் விநியோகத் தடை அமுலாக்கப்பட்டு மாலை 6.30 முதல் 7 மணி வரையான காலப்பகுதிக்குள் மீளிணைக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

I,J,K,L,P,Q ஆகிய வலயங்களில் மாலை 6.30 முதல் 7 மணி வரை மின் விநியோகத் தடை அமுலாக்கப்பட்டு இரவு 8 மணி முதல் 8.30 வரையான காலப்பகுதிக்குள் மீளிணைக்கப்படும்.

R,S,T,Wஆகிய வலயங்களில் இரவு 8 மணி முதல் 8.30 வரை மின் விநியோகத் தடை அமுலாக்கப்பட்டு இரவு 9.30 முதல் 10 மணி வரையான காலப்பகுதிக்குள் மீளிணைக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
















SHARE