
தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ் . போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த தென்மராட்சி பிரதேச செயலக உதவி பிரதேச செயலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை சேர்ந்த ஆறு மாத கர்ப்பிணியான சதீஸ் தமிழினி (வயது 33) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை படுக்கையறையில் இருந் நுளம்புத்திரி தவறுதலாக படுக்கையில் பட்டு தீப்பற்றியமையால் , தீக்காயங்களுக்கு உள்ளானார் என சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்
அதேவேளை இவரை காப்பாற்ற முற்பட்ட நிலையில், கணவரும் சிறு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருந்தார்.