Saturday, 22 February 2025

யாழில். மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞன் உயிரிழப்பு..!!!

SHARE


வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதில் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த விக்னேஸ்வரன் வினோஜன் (வயது-19) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்று முன்தினம் வியாழக்கிழமை(20) குறித்த இளைஞன் தனது நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் ஆறுகால்மடம் வைரவர் கோவில் பகுதியில் பயணித்தவேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயங்களுக்குள்ளான நிலையில் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற பிரஸ்தாப இளைஞரே உயிரிழந்துள்ளார்.

இம் மரணம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டார்.
SHARE