.jpg)
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை சென்றடையும்.
www.sailsubham.com என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசித்து பயணச்சீட்டுகளை பதிவு செய்ய முடியும். இந்த கப்பல் சேவையானது செவ்வாய் கிழமை தவிர்ந்து வாரத்திற்கு 6 நாட்கள் ஈடுபடும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த மாதத்தில் இரண்டு தடவைகள் கப்பல் சேவைகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டு , அவை நடைபெறாது தடைப்பட்டமை குறிப்பி
டத்தக்கது.