.jpg)
யாழ்ப்பாணத்தில் இருந்து மாடுகளை கடத்தி சென்றவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு கைது செய்துள்ளதுடன் , கடத்தி செல்லப்பட்ட 18 மாடுகளை உயிருடன் மீட்டுள்ளதுடன் , கடத்தலுக்கு பயன்படுத்திய பரவூர்தியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து அனுமதியின்றி சட்டவிரோதமாக மாடுகள் கடத்தி செல்லப்படுவதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வீதியில் பயணித்த பாரவூர்தியை வழிமறித்து சோதனையிட்டனர்.
அதன் போது , பாரவூர்திக்குள் 18 மாடுகள் , மிக நெருக்கமாக அடைக்கப்பட்டு இருந்தன. குறித்த பாரவூர்தி மாடுகளை கடத்தி செல்லும் போது , காற்று வருவதற்காக மேல் பகுதிகளில் சில பகுதிகள் விலக்கப்பட்டு இருந்ததுடன் , உள்ளே மாடுகளை கட்டி வைப்பதற்காக கம்பிகள் பொருத்தப்பட்டும், மாடு கடத்தல்களுக்காக என பிரத்தியோகமாக பரவூர்தி வடிவமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.