யாழ்ப்பாணம் செல்வதற்கு எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் - பாராளுமன்றத்தில் அர்ச்சுனா எம்.பி கோரிக்கை..!!!
பாராளுமன்ற அமர்வு நிறைவுற்றதும் தாம் யாழ்ப்பாணம் செல்ல வேண்டியுள்ளதால் தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு யாழ். மாவட்ட எம்.பி அர்ச்சுனா இராமநாதன் இன்று (19) சபையில் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தின் போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அர்ச்சுனா எம்.பி சபாநாயகரிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கொழும்பு நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் நான் யாழ்ப்பாணத்தில் இரண்டு நபர்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளேன். அந்த வகையில் பாராளுமன்ற அமர்வு முடிவடைந்த பின்னர் யாழ்ப்பாணத்திற்கு செல்ல நான் திட்டமிட்டுள்ளேன். அதனால் பொது அமர்வு காலத்திலாவது எனக்கு பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொலிஸ் துறைக்கு பொறுப்பான அமைச்சரிடம் நான் இந்த வேண்டுகோளை விடுக்கின்றேன். இது முக்கியமான விடயம் என்பதால் அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இதன்போது சபைக்கு தலைமைதாங்கிய பிரதி சாபாநாயகர், அந்த வேண்டுகோளை சபாநாயகருக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.