யாழில் நபரொருவரை கடத்திச் சென்று பணம் கொள்ளை ; சந்தேக நபர் கட்டுநாயக்கவில் கைது..!!!
யாழ்ப்பாணத்தில் கடந்த 08 ஆம் திகதி நபரொருவரை கடத்திச் சென்று 84 இலட்சத்து 78 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ்ப்பாணம் பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபர் துபாய்க்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்த போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.