Thursday, 27 February 2025

யாழில் வயரிங் வேலையில் ஈடுபட்டவர் உயிரிழப்பு..!!!

SHARE


யாழ்ப்பாணத்தில் வயரிங் வேலையில் ஈடுபட்ட குடும்பஸ்தர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

வண்ணார்பண்ணை - பத்திரகாளி கோவில் பகுதியைச் சேர்ந்த  42 வயதுடைய  இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் - பூநாரிமடம் பகுதியில் கட்டடிடம் ஒன்றில் முதலாவது மாடியில் குறித்த நபர் வயரிங் வேலையில்  ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தவறுதாலாக கீழே விழுந்துள்ளார்.

இதன்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
SHARE