Tuesday, 18 February 2025

80 பேருடன் பயணித்த கனடா விமானம் விபத்து..!!!

SHARE

கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் 80 பேருடன் பயணித்த விமானமொன்று தரையிறங்கும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அமெரிக்காவின் மினசோட்டாவிலிருந்து பயணத்தை ஆரம்பித்த டெல்டா விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளதாகவும், அதில் குழந்தையொன்றும் அடங்குவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விமானத்தில் பயணித்த 76 பயணிகள் மற்றும் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இந்த சம்பவத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாகக் கனடாவின் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், டொராண்டோவில் தொடர்ந்து பலத்த காற்று மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாமென சர்வதேச ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.
SHARE