Thursday, 27 February 2025

இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில் எப்பவுமே கோடீஸ்வரராக மாட்டார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?

SHARE

ஒருவர் வாழ்வதற்கு பணம் மிகவும் அவசியமானதாக மாறிவிட்டது. சிலர் தங்கள் வாழ்க்கை முழுவதையும் பணத்தை துரத்திச் செல்வதிலேயே கழிக்கிறார்கள், பணம் சம்பாதிப்பதற்கான புதுப்புது வழிகளைத் தேடுகிறார்கள், செலவுகளைக் குறைத்து அதிகமாகச் சேமிக்கிறார்கள். அவர்களின் காலம் முழுவதும் பணத்தை நோக்கி ஓடுவதாலேயே வீணாகிறது.

அதேசமயம் சிலர் பணக்காரராகாமல் இருப்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை, உண்மையில் அவர்கள் அதைப்பற்றி கவலைப்படுவதேயில்லை. ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்களுக்கு பணம் மட்டுமே எப்போதும் பெரிய விஷயமாக இருப்பதில்லை.

அவர்கள் தனிப்பட்ட மகிழ்ச்சி, அனுபவங்கள் மற்றும் சுதந்திரம் போன்றவற்றுக்கே முக்கியத்துவமே கொடுக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் கோடீஸ்வரராக மாட்டார்கள், ஆனாலும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.



மீனம்

மீன ராசிக்காரர்கள் பணத்தின் பின் எப்போதும் ஓட மாட்டார்கள், அவர்கள் பணத்தாசை கொண்டவர்கள் அல்ல. மாறாக, அவர்கள் செல்வத்தை விட படைப்பாற்றல், உணர்ச்சிகள் மற்றும் அர்த்தமுள்ள அனுபவங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள்.

மீன ராசிக்காரர்களுக்கு, செல்வத்தை குவிப்பதற்காக அயராது உழைக்கும் எண்ணம் பயனற்றதாக தோன்றுகிறது. அவர்கள் தங்கள் ஆர்வங்களைப் பின்பற்றுவதையே விரும்புகிறார்கள், அது அவர்களின் மகிழ்ச்சி சார்ந்த எந்த விஷயமாக வேண்டுமென்றாலும் இருக்கலாம்.

மகிழ்ச்சி மற்றும் திருப்தி என்பது மனதிலிருந்து வருகிறது, மாறாக வங்கிக் கணக்கிலிருந்து அல்ல என்று அவர்கள் நம்புகிறார்கள். அதனால்தான் அவர்கள் ஒருபோதும் கோடீஸ்வரரராக விரும்புவதில்லை.


தனுசு

தனுசு ராசிக்காரர்கள் அனைத்தையும் விட தங்கள் சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பணத்தின் பின்னால் ஓடுவது தங்கள் சுதந்திரத்திற்கு தடையாக இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் சாகசக்காரர்கள், எதிர்காலத்திற்காக பணத்தை நோக்கி ஓடுவதை விட, பயணம், கற்றல் மற்றும் சாகசம் போன்ற அனுபவங்களுக்காக தங்கள் பணத்தை செலவிட விரும்புகிறார்கள்.

அவர்களுக்கு, வாழ்க்கை என்பது பயணத்தைப் பற்றியது, பணத்தைக் குவிப்பது அல்ல. வங்கிக் கணக்கில் எண்கள் அதிகரிப்பதைப் பார்ப்பதற்காக தங்கள் நேரத்தையும், ஆற்றலையும் செலவழிப்பதில் அர்த்தமில்லை என்று அவர்கள் கருதுகிறார்கள். அவர்கள் அந்தந்த தருணத்தில் மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறார்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் அவர்களின் வாழ்க்கையை அவர்களுடைய சொந்த விதிமுறைகளின் படி வாழ்கிறார்கள், அதில் அவர்கள் பணத்தை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதும் அடங்கும். அவர்கள் பணத்தின் பின்னால் ஓடுவதை விட புதிய யோசனைகள் மற்றும் உலகில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

பணத்தை சம்பாதிக்கும் வழக்கமான முறைகள் பெரும்பாலும் அவர்களுக்கு சலிப்பானதாகத் தோன்றலாம். வேலையில் முன்னேறுவதிலா அல்லது தங்கள் வருவாயை அதிகரிப்பதிலோ கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் அர்த்தமுள்ள ஏதாவது ஒன்றில் வேலை செய்ய விரும்புவார்கள்.
SHARE