மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா வேலைகளும் தாமதமாக நடக்கும். அதனால் காலை நேரத்தை கொஞ்சம் முன்கூட்டியே துவங்கி விடுங்கள். எல்லா வேலைகளையும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே செய்வது நல்லது. இன்டர்வியூக்கு போறவங்க, வெளியூருக்கு பயணம் செய்பவர்கள், தேர்வுக்கு செல்பவர்கள் எல்லாம் இன்றைய தினம் கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும் நாளாக இருக்கும். உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். தேவையற்ற துன்பங்கள் விலகக் கூடிய நாளாக இருக்கும். வீட்டில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் உண்டு. தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் வீட்டில் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எந்த தடையும் வராது. உங்களுடைய இந்த நாள் இனிமையான நாளாக அமையும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். மேலதிகாரிகளுடைய ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. வியாபாரத்தில் நொடிந்த நிலையில் இருப்பவர்கள் கூட, ஏதாவது ஒரு வகையில் முயற்சி செய்து லாபத்தை அடைவீர்கள். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும் நாள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று உங்களுடைய வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். கடமையிலிருந்து தவறமாட்டீர்கள். குறித்த நேரத்திற்குள் சொன்ன வேலையை சரியாக முடித்துக் கொடுத்து விடுவீர்கள். இதனால் நல்ல பெயர் கிடைக்கும். நேரத்தை சரியாக செலவு செய்தால் எத்தனை லாபம் என்பதை நன்றாக உணரக்கூடிய நாள் இன்று.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று புகழ்ச்சி தானாக தேடி வரும். தலைகுனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நிதி நிலைமை சீராகும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த வாக்குவாதம் ஒரு முடிவுக்கு வரும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அடக்கம் தேவை. ஆர்ப்பாட்டம் இருக்கக் கூடாது. மேலதிகாரிகளிடம் பணிவோடு நடக்க வேண்டும். மாணவர்களாக இருந்தால் ஆசிரியர்களை எதிர்த்து பேசக்கூடாது. பிள்ளைகள், தாய் தந்தைகள் சொல் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும். இளைஞர்களாக இருந்தால் உங்களுடைய வாழ்க்கை பயணம் நேர் வழியில் இருக்க வேண்டும். எந்த கெட்ட பழக்கத்திற்கும் இடம் கொடுக்க வேண்டாம். இந்த நாள் கவனம் அதிகம் தேவை.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீட்டிற்கு உண்டான வழிகள் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சேமிப்புகள் கரையும். தேவையற்ற செலவு டென்ஷனை கொடுக்கும். சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வீட்டில் கொஞ்சம் சண்டைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். வாழ்க்கை துணையிடம் எந்த உண்மையையும் மறைக்க வேண்டாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். குழப்பம் இருக்கும். கவலை இருக்கும். உடல் உபாதைகள் கொஞ்சம் மருத்துவ செலவை உண்டு பண்ணும். வேலையில் முழு கவனத்தை செலுத்த முடியாது. வியாபாரத்தில் நிலையாக எந்த முடிவு எடுப்பது என்ற தடுமாற்றமும் இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். புதிய முதலீடுகள் செய்வதை தவிர்த்துக் கொள்வது நல்லது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று ஆழ்ந்த சிந்தனையில் இருப்பீர்கள். எல்லா வேலையும் சரியாக செய்தாலும், ஏதோ ஒரு உறுத்தல் உங்கள் மனதில் இருந்து கொண்டே இருக்கும். இதனால் சிலருக்கு தலைவலி வரவும் வாய்ப்புகள் இருக்கிறது. தேவையற்ற விஷயங்களை விட்டு விடுங்கள். தேவையான விஷயங்களை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கவலை கொள்வதால் எதுவும் மாறப் போவது கிடையாது. இந்த நாள் அது போன போக்கில் போகட்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கை நிறைய வருமானம் வரக்கூடிய நாளாக இருக்கும். ஏதாவது ஒரு வகையில் பணம் உங்கள் கையை வந்து சேரும். நிதி நிலைமை சீர்படும். பெரிய டென்ஷனில் இருந்து விடுபடுவீர்கள். நிம்மதியாக மூச்சு விடுவீர்கள். இரவு நல்ல தூக்கத்தை அடைவீர்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று உஷாராக இருக்க வேண்டும். அனாவசியமாக அடுத்தவர்களால் ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நல்லவர்களாக இருக்கலாம். ஆனால் ஏமாளியாக இருக்கக் கூடாது. இந்த வாசகம் இன்று உங்களுக்கு உதவியாக இருக்கும். குட்ட குட்ட குனிந்து செல்ல வேண்டாம். கொஞ்சம் தலை நிமிர்ந்து பாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.