Thursday, 27 February 2025

இன்றைய ராசிபலன் - 27.02.2025..!!!

SHARE


மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று செலவுகளை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆடம்பர செலவு செய்யக்கூடாது. சேமிப்புகள் கரைந்தால் அது எதிர்காலத்தில் பெரிய பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்த்து விடும். அவசியமான தேவைகளுக்கு மட்டும் பணத்தை செலவு செய்யுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள். அவசர புத்தி வேண்டாம்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொண்டு வந்து சேர்க்கும். இறைவழிபாடு மனதிற்கு நிம்மதியைத் தரும். முன்னோர்கள் வழிபாடு நல்லபடியாக நடந்து முடியும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். என்னதான் வீட்டில் வேலை இருந்தாலும் கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள்.



மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு உங்களைத் தேடி வரும். நீண்ட நாட்களாக செய்ய முடியாத நல்ல காரியத்தை இன்று செய்வீர்கள். எதிரியாக இருந்தவர்கள் கூட, உங்களோடு வந்து சேர்ந்து கொள்வார்கள். அந்த அளவுக்கு உங்களுடைய வாழ்க்கை தரம் இன்று உயரும்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று தேவையற்ற அலைச்சல் இருக்கும். வேலை பளு அதிகமாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் வேலை சுமை உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கும் வியாபாரம் செய்பவர்களுக்கும் பணி சுமை அதிகமாக தான் இருக்கும். உடல் சோர்வு ஏற்படும். நிறைய தண்ணீர் குடிக்கவும். நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள்.



சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிக்கல்கள் இருக்கும். நீங்கள் ஒரு பிளானை மனதில் வைத்துக் கொண்டு இருப்பீர்கள். ஆனால் நடப்பதெல்லாம் வேறு ஒன்றாக இருக்கும். யாராவது ஒருவர் சங்கடத்தை கொடுப்பதற்காகவே உடன் இருப்பார்கள். வேண்டாம் என்று சிலவற்றை ஒதுக்கி வைக்கவும் முடியாது. வேண்டுமென்று சிலவற்றை கூடவே வைத்துக் கொள்ளவும் முடியாது. தர்ம சங்கடமான சூழ்நிலை தான் இன்று.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் முன்கோபம் வரும். எல்லா விஷயத்திலும் கோபப்பட்டுக் கொண்டே இருக்க போகிறீர்கள். இதனால் வேலைகள் சரியாக நடக்காது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கட்டாயம் பொறுமை தேவை. பிள்ளைகளை ரொம்பவும் திட்டாதீர்கள். கோபத்தை கணவர் மீது வீட்டு பெரியவர்கள் மீது காட்ட வேண்டாம். பொறுமை தேவை வேலைகளும் வியாபாரத்திலும் கூட நிதானம் தேவைப்படுகிறது.
 

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயத்தை எல்லாம் சரியாக செய்து முடிப்பீர்கள். மனதிற்கு நிறைவு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத முன்னேற்றம் இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். நீங்கள் நினைத்த நல்ல விஷயங்கள் நடக்கும். முன்னோர் வழிபாடு செய்து மன நிறைவை அடைவீர்கள். ஆனாலும் ஏதோ ஒரு சிந்தனை மனதிற்கு நெறுடலை கொடுக்கும். வயதான இரண்டு பேருக்கு உணவு வாங்கி தானம் கொடுங்கள் எல்லாம் சரியாகிவிடும்

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வேலையில் கவனம் தேவை. வியாபாரத்தில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. கவனக்குறைவாக நீங்கள் செய்யக்கூடிய சின்ன தவறு கூட பெரிய அளவில் தாக்கத்தை கொடுத்து விடும். ஜாக்கிரதை, கவனக்குறைவாக இருந்தால் எந்த வேலையும் செய்யாதீங்க சும்மாவே இருங்க அது ரொம்ப நல்லது.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வேண்டாம். சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வரும். இறைவழிபாடு செய்யுங்கள். முன்னோர்களுக்கு நன்றி சொல்லுங்கள். காகத்திற்கு சாதம் வையுங்கள். அன்றாட வேலையை மட்டும் கவனத்தோடு செய்தால் போதும் முடிந்தால் கோவிலுக்கு போகலாம்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் நிதானம் தேவை. அவசரம் கூடாது. முன்கோபம் கூடாது. வார்த்தையில் குறிப்பாக நிதானம் தேவை. மேலதிகாரிகளுடன் அனுசரணையாக நடக்க வேண்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளக்கூடாது. பொறுமை பொறுமை பொறுமை. வீட்டு பக்கத்தில் இருக்கும் கோவிலில் சென்று, ஐந்து நிமிடம் அமைதியாக தியானம் செய்யுங்கள் நல்லது.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று இறைவழிபாடு நல்லபடியாக நடந்து முடியும். நல்லபடியாக சாப்பாடும் கிடைக்கும். ஆரோக்கியம் கிடைக்கும். நல்ல ஓய்வு கிடைக்கும். ஏதோ ஒரு ரிலாக்ஸ் ஆன நாளாக இந்த நாள் செல்லும். மற்றபடி வேலையெல்லாம் ஒரு பக்கம் சரியாக நடந்து கொண்டே இருக்கிறதா, என்பதை நீங்கள் கவனித்துக் கொள்வீர்கள். எவ்வளவு தான் ஓய்வு எடுத்தாலும் வேலையில் இருக்கும் கண்ணும் கருத்தும் குறையாது.
SHARE