மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனதளவில் நிறைய நல்ல மாற்றங்கள் ஏற்படும். உங்களுடைய மனது இறைவழிபாட்டில் ஈடுபடும். நிறைய நல்ல விஷயங்களை சாதிக்க இறையருள் கிடைக்கும். ஈசனின் அருளால் நீங்கள் நினைத்த நல்ல காரியங்கள் எல்லாம் இன்று நடக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் உண்டாகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பலவகையான நன்மைகள் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத முன்னேற்றத்தை அடைவீர்கள். வீட்டில் சந்தோஷ பெருகும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை அமையும். சுப காரியங்கள் எல்லாம் நடப்பதற்கு உண்டான வேலைகள் வீட்டில் துவங்கும். குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று இறை வழிபாடு செய்து மன நிறைவை அடைவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிந்தனைகள் இருக்கும். மன குழப்பம் இருக்கும். எந்த வேலையை முதலில் செய்வது, எந்த வேலையை பின்பு செய்வது என்று தெரியாத சூழ்நிலை உண்டாகும். கொஞ்சம் வேலையில் பிரஷர் இருக்கத்தான் செய்யும். வியாபாரத்திலும் அதிக அக்கறையை காட்ட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் உங்கள் மனதை அமைதி படுத்த சிவன் கோவில்தான் ஒரே இடம். 10 நிமிடம் சிவன் கோவிலில் அமர்ந்து பிறகு வேலையை துவங்குங்கள் நல்லது நடக்கும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று எதிர்ப்பாராத வருமானமோ, பரிசோ கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். நீண்ட நாள் நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் ஒரு பலன் கிடைக்கப்போகிறது. வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிவனை கும்பிடுங்கள் நிச்சயம் நீங்கள் நினைத்து நல்லது இன்று நடக்கும்.
- Advertisement -
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் இருக்கும். காலை நேரத்திலேயே உங்கள் அலுவலக வேலை வியாபாரம் எல்லாவற்றையும் முடித்துவிட்டு, மாலை சிவன் கோவிலுக்கு சென்று சிவ பூஜையை துவங்கி விடுவீர்கள். சிம்ம ராசிக்காரர்கள் இன்று நிறைய பேருக்கு இரவு கண் விழிக்கும் பாக்கியம் கிடைக்கும். சிவனின் காலை இறுக்க பற்றி கொள்ளுங்கள்.
கன்னி
கன்னிராசிக்காரர்களுக்கு இன்று நல்ல காலம் கைக்கூடி வரும். நீங்கள் நினைத்து பார்க்காத நல்லது தானாக உங்கள் வீட்டு வாசல் கதவை தட்டும். அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எது நல்லது, எது கெட்டது என்று தெரியாமல் வரும் வாய்ப்புகளை தட்டிக் கழிக்க கூடாது. ஈசனின் மீது பாரத்தை போட்டு வரும் வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறும் வழியை பாருங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூட கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் கைகூடும். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பார்ட்னர்ரோடு இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். கடன் சுமை குறையும். நிதிநிலைமை சீர்படும். சிவனின் அருள் ஆசி உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று உயர்ந்த பதவிகள் வாழ்க்கையில், உயர்ந்த இடத்திற்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். நாலு பேர் மத்தியில் உங்களுடைய கௌரவம் கூடும். தலைகுனிந்த இடத்தில் தலைநிமிர்ந்து நிற்பீர்கள். பெரிய மனிதர்களுடைய அந்தஸ்து என்றால் என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். எல்லாம் நாம் நடந்து கொள்வதில் தான் இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்வீர்கள். வாழ்க்கை தரத்தை உயர்த்த மேலும் போராடுவீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு தேவையற்ற மன குழப்பம் இருக்கும். வேலையில் ஒரு மன நிம்மதி இருக்காது. வியாபாரத்தை பொருத்தவரை ஒரு இடத்தில் அமர்ந்து உங்களால் வியாபாரமும் செய்ய முடியாது. ஏதோ ஒரு இடர்பாடுகளை இந்த நாள் உங்களுக்கு கொடுத்துக் கொண்டே இருக்கும். அதிலிருந்து விடுபட சிவ வழிபாடு ஒன்று மட்டுமே நல்ல தீர்வை கொடுக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு அந்த ஈசனின் அருள் ஆசியால் இன்று நல்ல செய்தி உண்டு. நீண்ட தூரத்திலிருந்து தொலைபேசி மூலமாகவது மனதிற்கு மகிழ்ச்சி தரும் ஒரு செய்தி உங்களை வந்து சேரும். வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு செல்லுங்கள். மற்ற தலைபோகும் காரியமாக இருந்தாலும் இன்று ஈசனை வழிபட மறக்காதீர்கள். பல கஷ்டங்கள் உங்களை விட்டு விலக ஈசன் வழிபாடு என்று உங்களுக்கு கை கொடுக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுடைய மனது இன்று ஆன்மீகத்தில் இருக்கும். சிவ பக்தர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்களுடைய பாவத்தை போக்கிக் கொள்ள, இயலாதவர்களுக்கு உதவி செய்யலாம். சந்தோஷமாக இந்த நாளை நடத்திச் செல்வீர்கள். மற்றபடி வேலை வியாபாரம் எல்லாம் நினைத்ததை விட நல்லபடியாக நடக்கும் சுப செலவுகள் உண்டாகும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அளைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் கொஞ்சம் பிரஷர் இருக்கும். மேலதிகாரிகளோடு நிறைய வாக்குவாதம் செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உங்களுடைய நிலைமையை அடுத்தவர்களுக்கு சொல்லி புரிய வைப்பீர்கள். இந்த நாள் இறுதியில் நீங்கள் நினைத்த நல்லது நடக்கும். பல போராட்டங்களுக்கு பின் வெற்றி காண்பீர்கள். ஈசனின் அருள் உங்களுக்கு கிடைக்கும்.