Tuesday, 25 February 2025

இன்றைய ராசிபலன் - 25.02.2025..!!!

SHARE


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புது முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். சுறுசுறுப்பாக இந்த நாளுக்கான வேலையை செய்து முடிப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் சரியாகும். சேமிப்புக்கு உண்டான புதிய முயற்சிகள் வெற்றியை தரும். சேமிப்பு இரட்டிப்பாகும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து கூட கூடிய நாளாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். எப்படியாவது இந்த வேலையை வாங்கி விட வேண்டும், எப்படியாவது இந்த வியாபாரத்தை ஆரம்பித்து விட வேண்டும், என்ற குறிக்கோள் உங்களிடத்தில் இருந்தால் அந்த முயற்சிகளை இன்று மேற்கொள்ளலாம். வங்கி கடனோ அல்லது தெரிந்தவர்கள் மூலமோ உதவி கேட்பதாக இருந்தால் இன்றைய தினம் முயற்சி செய்யுங்கள். நல்லது நடக்கும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அடுத்தவர்கள் வாழ்க்கையை பார்த்து சின்னதாக ஆசை வரும். நமக்கும் இது போல நல்ல வாழ்க்கை அமையாதா என்று ஏக்கம் வரும். உங்களுக்கான வாழ்க்கையும் நல்ல வாழ்க்கை தான். அடுத்தவர்களுடைய வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனை நம் கண்களுக்கு தெரியாது. ஆகவே அடுத்தவர்களை பார்த்து வாழ வேண்டாம். உங்களுக்கு என்ன இறைவன் கொடுத்திருக்கின்றானோ, அதை வைத்து திருப்தி அடைந்து கொள்வது நல்லது.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று கோடி ரூபாய் கொடுத்தாலும் பொய் சொல்ல மாட்டீங்க. குறுக்கு பாதையை தேர்ந்தெடுக்க மாட்டீர்கள். மனதில் நேர்மை என்ற வார்த்தை மட்டும் இருக்கும். இந்த நேர்மை உங்களுடைய வாழ்க்கையை உயர்த்திச் செல்லும். மேலதிகாரிகளாக இருந்தாலும் சரி, அல்லது பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தைகளாக இருந்தாலும் சரி, இன்றைய நாள் உங்களுக்கு, சோதனைகள் வரும். அதில் நீங்கள் நீதியை நிலைநாட்டி பெருமை கொள்வீர்கள்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி வரக் கூடிய நாளாக இருக்கும். தொலைபேசியின் மூலம் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். மனது மகிழ்ச்சி அடையும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். கடன் சுமையிலிருந்து வெளிவருவீர்கள். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். கைக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத நன்மைகள் நடக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உறவுகளோடு இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். நீண்ட நாள் பேசாத உறவுகள் தானாக வந்து பேசுவார்கள். சந்தோஷம் இருக்கும். பெண்களுக்கான பொன் பொருள் சேர்க்கையும் இருக்கிறது. வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று முன்னேற்ற பாதையில் பயணம் செய்வீர்கள். உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். கமிஷன் தொழில் மனநிறைவை கொடுக்கும். நீண்ட நாள் வராத பணம் கையை வந்து சேரும் கடன் சுமை குறையும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கும். எந்த ஒரு செயலையும் திறமையாக செய்வீர்கள். ஒரு ரூபாய் லாபம் எடுக்க வேண்டிய இடத்தில், பத்து ரூபாய் லாபம் எடுக்கும். உங்களுக்கான திறமை இன்று வெளிவரும். இந்த நாளை சரியாக பயன்படுத்தினால் போதும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நிதிநிலைமை கொஞ்சம் மோசமாகும். செலவுகள் அதிகமாக இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். அதிக வட்டிக்கு கடன் வாங்கிடாதீங்க. பிறகு திருப்பிக் கொடுப்பதில் சிரமம் இருக்கும். முடிந்தவரை செலவுகளை தான் குறைக்க வேண்டும். கடன் வாங்குவதை ஊக்கப்படுத்தி கொள்ளாதீர்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். மனநிறைவான நாளாக இந்த நாள் இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவு ஒரு முடிவுக்கு வரும். பிரிந்த கணவன் மனைவி உறவு ஒன்று சேர்வதற்கு நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது. குடும்ப ஒற்றுமைக்கு உண்டான முயற்சிகளை இன்று மேற்கொள்ளலாம்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. எந்த ஒரு வேலையும் லேட்டாக துவங்கக் கூடாது. ஒரு இடத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தால் கூட, அரை மணி நேரம் முன்கூட்டியே கிளம்புங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது. பஸ் புக் பண்ணி இருக்கீங்க, ட்ரெய்னுக்கு புக் பண்ணி இருக்கீங்கண்ணா நீங்கள் இன்னும் இந்த நாளை கவனமாக இருக்க வேண்டும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று கடின உழைப்பு இருக்கும். எப்படியாவது கையில் கொடுத்த பொறுப்புகளை சரியாக முடிக்க வேண்டும் என்ற குறிக்கோள் இருக்கும். வேலையில் கண்ணும் கருத்துமாக நடந்து கொள்வீர்கள். உங்களுடைய அலட்சிய போக்கால் நடந்த தவறுகளை திருத்திக் கொள்வீர்கள். மன நிம்மதியான நாளாக இந்த நாள் இருக்கும். உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும்.
SHARE