மேஷ ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் பொறுமைசாலிகளாக இருப்பீர்கள். எதிலும் அவசரப்பட மாட்டீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் அடுத்தவர்களுடைய நலனையும் பார்ப்பீர்கள். பொதுநலத்தோடு செயல்படுவீர்கள். சிக்கனமாக இருப்பீர்கள். சேமிப்பை உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். நீண்ட நாள் துன்பங்கள் உங்களை விட்டு விலகி விடும். வேலையில் ஆர்வம் அதிகரிக்கும். எப்படியாவது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். குடும்பத்தை பற்றிய சிந்தனை, மனைவி குழந்தைகளைப் பற்றிய சிந்தனை உங்களை வாழ்க்கையில் சீர்படுத்தி விடும். தகாத நட்பு, தகாத பழக்க வழக்கம் உங்களை விட்டு விலகும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சுட கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். தொழிலை விரிவு படுத்தலாம். புது வேலைக்கு முயற்சி செய்யலாம். இருக்கும் வேலையில் இருந்து பிரமோஷனுக்கும் முயற்சி செய்யலாம். நல்லது நடக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீகத்தில் மனதை ஈடுபடும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று பேராசை இருக்கும். நிறைய நல்ல விஷயங்களை செய்ய வேண்டும். நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேறி வேண்டும் என்று ஆர்வக்கோளாறு சில பல வேலைகளை செய்வீர்கள். அது எதிர்பாராமல் நன்மையிலும் முடிந்துவிடும். பேராசைப்படுவது கூட நல்லது தான் போல என்ற ஒரு எண்ணம் உங்களுக்கு வரலாம். ஆனால் பேராசை தவறு ஜாக்கிரதை.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். சேமிப்பு கொஞ்சம் கரையும். சில பேருக்கு சுப செலவு, சில பேருக்கு வீண் விரைய செலவு இப்படி இருக்கலாம். இருந்தாலும் அடுத்தவர்களை நம்பி பணம் கொடுக்காதீங்க. மலிவு விலை பொருட்களை நம்பி வாங்காதீங்க. சின்ன சின்ன ஏமாற்றம் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கும். நான்கு பேர் மத்தியில் சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். தலைநிமிர்ந்து நிற்பீர்கள். பெருமையான நாளாகவும் இருக்கும். அடுத்தவர்களால் செய்ய முடியாத கஷ்டமான வேலைகளை கூட திறமையாக புத்திசாலித்தனத்தோடு செய்து முடிப்பீங்க என்ஜாய் பண்ணுங்க.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். எந்த பிரச்சனைக்கும் போக மாட்டீங்க. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். புது முயற்சிகளில் மேற்கொள்ள மாட்டீர்கள். அவ்வளவுதான். மற்றபடி வியாபாரம் வேலை எல்லாம் நீங்கள் நினைத்தபடி நடக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாள். நீண்ட நாள் பிரச்சனைகள் சரியாக கூடிய நாள். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடிய நாள். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். பெரியவர்களின் ஆசி இறைவனின் ஆசி கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் பொங்கி வழியும். பிரிந்த உறவோடு ஒன்று சேருவீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வாழ்க்கையில் நடக்கவே நடக்காது என்ற நல்ல விஷயங்கள் கூட இன்று நடக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று ஜெயம் உண்டாகக் கூடிய நாளாக இருக்கும். இறைவழிபாட்டில் மனது ஈடுபடும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். மேலதிகாரிகளோடு நல்ல உறவு ஏற்படும். கருத்து வேறுபாடுகள் விலகி வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் சுமை குறையும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று சாதனை படைக்கப் போகிறீர்கள். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். கடன் சுமை குறையும். வருமானம் பெருகும். பொன் பொருள் சேர்க்கையும் இருக்கிறது. குடும்ப உறவுகள் மத்தியில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உன் கோபத்தை வீட்டில் இருப்பவர்களிடம் கட்டாயம் காட்டக்கூடாது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் டென்ஷன் உண்டாகும். நீண்ட தூர பயணத்தால் அலைச்சல் இருக்கும். மேலதிகாரிகளை திருப்தி படுத்த முடியாது. ஆனால் உங்களுடைய வேலையிலும் கடமையிலும் நீங்கள் சரியாகத்தான் இருப்பீர்கள். உங்களை பார்த்து சில பேர் பொறாமை படலாம் ஜாக்கிரதையாக இருக்கவும்.