மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் பொறுமையான நாளாக இருக்கும். எல்லா வேலைகளையும் குறித்த நேரத்திற்கு செய்து முடிப்பீர்கள். வேலையில் இருந்து வந்த டென்ஷன், வியாபாரத்தில் இருந்து வந்த டென்ஷன் எல்லாம் குறையும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை கொடுக்கும். விவசாயிகளுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையான நல்ல விஷயங்கள் எல்லாம் தானாக வீடு தேடி வரும். உங்கள் மனதில் நினைத்த காரியங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக நல்லபடியாக நடக்கும். இது உங்களுக்கான நாளாக அமையும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில் நீங்கள் கேட்ட பதவியை, கேட்ட சம்பளத்தை கொண்டு வந்து கையிலேயே கொடுப்பார்கள். இன்றைய வாழ்க்கை கனவா நினைவா என்று சிந்திக்கும் அளவுக்கு உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் சின்ன சின்ன பிரச்சனைகள் சின்ன சின்ன தோல்விகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மனதை தைரியத்தோடு வைத்துக் கொள்ள வேண்டும். தோல்விகளை கண்டு, பிரச்சனைகளை கண்டு பின்வாங்க கூடாது. விடாமுயற்சியை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் இன்றைய நாள் இனிய நாளாக அமையும். இல்லை என்றால் வாழ்க்கையில் பின்னுக்கு செல்லக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். எந்த வேலையை தொட்டாலும் அதில் ஒரு பிரச்சனை இழுபறி இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்யக்கூடாது. வேலையில் புதுசாக மேனேஜரோ அல்லது புது முதலாளி வந்திருந்தாலோ அவர்களிடம் நிதானமாக இருக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். வேலையில் கொஞ்சம் பொறுமை தேவை. அடுத்தவர்களுடைய பேச்சைக் கேட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களை பற்றி பின்னால் புறம் பேசாதீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பெருமையான நாளாக இருக்கும். வாழ்க்கையில் நிறைய நல்லது நடக்கும். யாராலும் செய்ய முடியாத விஷயத்தை நீங்கள் செய்து ஜெயித்து காட்டுவீர்கள். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். அது மட்டுமல்லாமல் அடுத்தவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து, மன நிறைவை அடைவீர்கள். இரவு நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். எந்த ஒரு முடிவையும் அவ்வளவு சுலபத்தில் எடுக்க முடியாது. அடுத்தவர்களுடைய பேச்சு உங்களை குழப்பி விடும். வாழ்க்கையின் மீது அதிக பயம் இருக்கும். குழந்தைகளைப் பற்றி, எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவீர்கள். டென்ஷனை அதிகரித்துக் கொள்ள வேண்டாம். அமைதியோடு அன்றாட வேலையை கவனியுங்கள். பிறகு மற்றதை எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வான்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்கள் இன்று நல்ல செயல்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். கோவில்களுக்கு செல்வது, கோவிலை அங்கு சென்று கோவிலை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுவது, ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வது, இது போன்ற பொதுப்பணிகளில் உங்களை நீங்களே ஈடுபடுத்திக் கொள்வீர்கள். சுயநலம் இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் வரும். சந்தோஷம் அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் நடக்கும். நீண்ட நாட்களாக பிரிந்த உறவுகளோடோ நண்பர்களோடு சேர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. மற்றபடி ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. வண்டி வாகனம் ஓட்டும் போது கொஞ்சம் கவனம் தேவை. கவனக்குறைவாக எந்த ஒரு வேலையையும் செய்யக்கூடாது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். சோம்பேறித்தனம் இருக்காது. நீண்ட நாட்களாக செய்ய முடியாமல் இருந்த வேலையை எல்லாம் இன்று கையில் எடுத்து செய்து முடிப்பீர்கள். உற்சாகம் இருக்கும். பண வரவு இருக்கும். கடன் சுமையும் குறையும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு மன நிம்மதியான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். உங்களால் வந்த பிரச்சனையை, நீங்களே சரி செய்து விடுவீர்கள். தேவையற்ற டென்ஷனில் இருந்து விடுபடுவீர்கள். வீட்டில் புது உறவுகளின் வருகை, புது உறவு சேர்க்கை இருக்கும். சந்தோஷம் அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்வு இருக்கும். நல்ல ஓய்வு கிடைக்கும். அலைச்சல் இல்லாத இந்த நாள் சொர்க்கம் போல உங்கள் கண்களுக்கு தெரியும். நிதி நிலைமை சீராகும். மனைவிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றவும் வாய்ப்புகள் இருக்கிறது. குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். கணவன் மனைவி ஒற்றுமை மனதிற்கு நிம்மதியை தரும்.