மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற செலவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கையில் இருக்கும் பணத்தை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். உங்களிடம் இருக்கும் பணத்தை வெளி ஆட்களிடம் சொல்ல வேண்டாம். சொந்த பந்தங்களோடு பிரச்சனைகள் தான் வரும். கடன் என்று கேட்டால் தர மாட்டேன் என்றும் சொல்ல முடியாது. பணத்தை தந்தால் திரும்பவும் வராது ஆக இக்கட்டான சூழ்நிலையில் சிக்காமல் இருக்க இன்று கவனம் தேவை.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வீட்டில் சந்தோஷம் நிறைவாக இருக்கும். சுபகாரிய பேச்சுக்கள் நடக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வியாபாரத்திலும் வேலையிலும் இருந்து வந்த தடைகள் விலகும். உற்சாகத்தோடு இந்த நாளை கடந்து செல்லலாம். இந்த நாள் இறுதியில் இன்று மாலை குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்லவும் வாய்ப்புகள் இருக்கிறது. சுப செலவுகள் உண்டாகும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு, எதிர்பாராத சந்தோஷத்தை கொடுக்கும். இந்த பணம் வராது அவ்வளவுதான் என்று முடிவு கட்டி வைத்திருப்பீர்கள். ஆனால் அந்த பணம் கைக்கு வந்து சேரும். அதன் மூலம் சொத்து சுகம் வாங்கலாம், அல்லது ஏதோ ஒரு சேமிப்பு, நகை வாங்கலாம், இப்படி ஏதாவது ஒரு நல்ல விஷயம் நடக்க வாய்ப்புகள் இருக்கிறது. வேலையிலும் வியாபாரத்திலும் கொஞ்சம் கவனம் இருக்க வேண்டும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் பிரச்சனை இருக்கலாம். இருந்தாலும் உங்களைப் பார்த்துக் கொள்ள ஆசையோடு அன்போடு பக்கத்தில் வாழ்க்கைத் துணை இருக்கும் போது என்ன கவலை. கணவன் மனைவி ஒற்றுமை கூடும். சந்தோஷம் பிறக்கும். உங்களுடைய மனது நிம்மதி அடையும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்லதே நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் அடையக்கூடிய நாளாக இருக்கும். பாராட்டுகளும் புகழும் தானாக தேடி வரும். வேலை செய்யும் இடத்திலிருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள். சொந்த பந்தங்களோடு இருந்து வந்த மனஸ்த்தாபங்கள் நீங்கி ஒற்றுமை நிலவும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற டென்ஷன், மன பயம் பதட்டம் இருக்கும். வேலையில் முழு கவனம் செலுத்த முடியாது. வியாபாரத்திலும் முழு கவனம் செலுத்த முடியாது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அடுத்தவர்களை பற்றி சிந்திக்க வேண்டாம். அடுத்தவர்கள் என்ன நினைத்தாலும் கவலை இல்லாமல், உங்கள் மனதிற்கு பட்டதை செய்யுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று எப்படியாவது ஜெயித்து காட்ட வேண்டும் என்று நிறைய முயற்சிகளை முதலீடாக போடுவீர்கள். கரடு முரடான உங்கள் வாழ்க்கை பாதையில் கஷ்டங்கள் விலக வேண்டும் என்று நினைப்பீர்கள். பிள்ளைகளுடைய முன்னேற்றத்திற்கு தேவையான முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். இருந்தாலும் ஏதோ ஒரு இடத்தில் சரிவு உண்டாகும். இறைவனின் மீது பாரத்தை போட்டு முயற்சிகளை மேற்கொள்ளலாம். எத்தனை தடவை தோற்றாலும் இறுதியில் நிச்சயம் வெற்றி உங்களுக்கு கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று குழப்பங்கள் தெளிவு பெறக்கூடிய நாளாக இருக்கும். தெளிவான மனநிலைமையில் இருப்பீர்கள். எந்த ஒரு முடிவையும் சர்வ சாதாரணமாக எடுத்து விடுவீர்கள். எல்லோர் முன்பும் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகளை எல்லாம் சுலபமாக சமாளித்து விடுவீர்கள். திறமையாக வலம் வருவீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று நிறைய நல்ல காரியங்களை செய்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வது, நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டிருந்த வேலையை எடுத்து நல்லபடியாக செய்து முடிப்பது, வீட்டு பெரியவர்களுக்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து செய்வது, வீட்டை ஒழுங்கு படுத்துவது, போன்ற விஷயங்களில் எல்லாம் உங்களுடைய ஆர்வம் அதிகரிக்கும். சோம்பேறி பட்டம் விலகும் நல்லது நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. இறை நம்பிக்கை அதிகரிக்கும். மற்றபடி வேலையிலும் வியாபாரத்திலும் பெருசாக எந்த ஒரு தொந்தரவும் இருக்காது. சில பேருக்கு கடன் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. வாங்கிய கடனை சீக்கிரம் அடைப்பதற்கு உண்டான வழியை தேடுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று அயராது உழைப்பீர்கள். உங்கள் வேலையை குறித்த சமயத்தில் செய்து முடிப்பீர்கள். மேல் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ரீதியான பிரச்சனைகள் சரியாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சின்ன சின்ன சுபகாரிய தடைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று தடைகளும் தாமதங்களும் இருக்கும் உடல் சோர்வும் இருக்கும். எடுத்த வேலையை குறித்த நேரத்தில் செய்து முடிக்க முடியாத சூழ்நிலை இருக்கும். வருத்தப்படாதீர்கள். எல்லாம் கூடிய விரைவில் சரியாகும். இன்றைய நாள் கொஞ்சம் மந்தமாக இருப்பதால் அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.